செய்திப்பிரிவு

Published : 28 Aug 2019 09:52 am

Updated : : 28 Aug 2019 09:52 am

 

ஆட்டோமொபைல் துறையில் தேக்க நிலை எதிரொலி; மாருதி சுஸுகியில் 3 ஆயிரம் தற்காலிக பணியாளர்கள் வேலையிழப்பு 

3000-workers-losing-job-in-maruthi-suzuki

புதுடெல்லி

ஆட்டோமொபைல் துறையில் ஏற் பட்டுள்ள தேக்க நிலை காரணமாக மாருதி சுஸுகி நிறுவனம் 3 ஆயிரம் தற்காலிக பணியாளர்களுக்கான ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை. இதனால் இவர்கள் அனைவரும் வேலையிழந்துள்ளனர். அதிகரித்து வரும் உற்பத்தி செலவு, தேக்க நிலை காரணமாக இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார் கவா தெரிவித்துள்ளார்.

புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள வாகனத் தயாரிப்பு விதிகள் மற்றும் அதிக வரி விதிப்பு ஆகியன இத்துறைக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள தாக அவர் கூறினார். நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் அவர் இதை தெரிவித்தார்.

ஆட்டோமபைல் துறை தொடர்ந்து 9 மாதங்களாக சரிவைச் சந்தித்துவருகிறது. இதன் விளை வாக பெரும்பாலான நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி ஆலை களுக்கு விடுமுறை (லே ஆஃப்) அளித்துள்ளன.

புகை மாசைக் கட்டுப்படுத்தும் விதமாக சிஎன்ஜி வாகனத் தயாரிப் பிலும், ஹைபிரிட் கார் தயாரிப் பிலும் கவனம் செலுத்த திட்டமிட் டுள்ளதாக பார்கவா தெரிவித்தார்.

சிறிய ரக டீசல் இன்ஜின் கார்களுக்கு மாற்றாக சிஎன்ஜி கார்கள் இருக்கும் என நிறுவனம் கருதுகிறது.

மாருதி சுஸுகி நிறுவனத் தயாரிப்புகளில் டீசலில் ஓடும் கார்களின் பங்களிப்பு 23 சதவீத மாகும். இதை படிப்படியாகக் குறைத்துக்கொள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

விற்பனை சரிவு

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையான காலத்தில் 4,74,487 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள் ளது. முந்தையஆண்டு இதே காலத் தில் நிறுவனம் 6,17,990 கார்களை விற்பனை செய்துள்ளது. விற்பனை யில் 23 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. சிஎன்ஜி வாகனங்களைப் பொருத்த மட்டில் இந்நிறுவனம் இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக னங்களை விற்பனை செய்துள்ளது.

ஹீரோ 4 நாள் விடுமுறை

இரு சக்கர வாகன தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஹீரோ மோட்டார் குழுமம் விற்பனை தேங்கியுள்ளதை சரி செய்வதற்காக உற்பத்தியை நான்கு நாட் களுக்கு நிறுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது.

15 ஆயிரம் பேர் வேலையிழப்பு

கடந்த 3 மாதங்களில் ஆட்டோ மொபைல் துறையில் இதுவரை 15 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ள தாக ஆட்டோமொபைல் உற்பத்தித் துறை கூட்டமைப்பு (சியாம்) தெரி வித்துள்ளது. விநியோக பிரிவில் பணியாற்றிய 2 லட்சம் பேர் வேலை யிழந்துள்ளதாக தகவல்கள் தெரி விக்கின்றன. கடந்த 18 மாதங்களில் 300 விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

ஆட்டோமொபைல் துறைமாருதி சுஸுகி3 ஆயிரம் பேர் வேலையிழப்புதற்காலிக பணியாளர்கள் வேலையிழப்பு
Popular Articles

You May Like

More From This Category

More From this Author