

எல் அண்ட் டி பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 8.5 சதவீதம் உயர்ந்து 72.05 ரூபாயில் முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே 10 சதவீதம் அளவுக்கு கூட உயர்ந்தது.
இதனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 966 கோடி ரூபாய் உயர்ந்து 12,397 கோடி ரூபாயாக இருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான வார்பர்க் பின்கஸ் எல் அண்ட் டி பைனான்ஸ் நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை வாங்க போவதாக வந்த செய்தியினை அடுத்து இந்த பங்குகள் உயர்ந்து முடிந்தன.
முதலீடு குறித்த செய்தி வெளி யானவுடன், எல் அண்ட் டி நிறுவனம் பங்குச்சந்தைக்கு விளக்கம் அளித்திருக்கிறது. நாங்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் பல முதலீட்டா ளர்களிடம் பேசி வருகிறோம்.
இப்போதைக்கு எந்த தகவலையும் பங்குச்சந்தைக்கு உறுதியாக கூறமுடியாது என்று எல் அண்ட் டி பைனான்ஸ் தெரிவித்திருக்கிறது.