செய்திப்பிரிவு

Published : 27 Aug 2019 09:28 am

Updated : : 27 Aug 2019 09:28 am

 

வங்கிகளின் கடன் வளர்ச்சி 15% அதிகரிக்கும்: மூடி’ஸ் கணிப்பு

moodys-analytics

மும்பை

பொதுத் துறை வங்கிகளில் ரூ.70 ஆயிரம் கோடி தொகையை அரசு முதலீடு செய்யும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித் தார். மத்திய அரசின் இந்த நடவடிக் கையால் பொதுத் துறை வங்கிகள் வழங்கும் கடன் அளவு 2019-20 நிதி ஆண்டில் 13 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கும் என தரச்சான்று நிறுவனமான மூடி’ஸ் தெரிவித்துள்ளது. அத்துடன் வங்கிகள் தங்களது மூலதன அளவை பேஸல்-3 அளவுக்கு உயர்த்திக் கொள்ளவும் இது உதவியாக இருக்கும் என்று சுட்டிக் காட்டியுள்ளது.

சந்தைப் பொருளா தார நடவடிக்கைகளை ஊக் குவிக்க வட்டி விகிதக் குறைப்பு, வங்கிகளில் மறுமூலதனம் போன்ற நடவடிக்கைகளை அரசு எடுத் துள்ளது. இந்த நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சியை ஓரள வுக்கு நிலையாக வைத்திருக்கும் என தொழில்துறையினர் நம்பு கின்றனர். வங்கிகளில் செய்யப் படும் மறுமூலதனத்தினால் வங்கி களின் கடன் வளர்ச்சி அதிகரிக்கும் என மூடீ’ஸ் தெரிவித்துள் ளது.

வங்கிகளின் கடன் வளர்ச்சிமூடி’ஸ் கணிப்புMoodys analytics
Popular Articles

You May Like

More From This Category

More From this Author