

மும்பை
ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் வரி ஏய்ப்பு மோசடிகள் மூலம் வெளிநாடுகளில் பெருமள விலான பணத்தை குவித்திருப்ப தாக அமலாக்கத் துறை தனது விசார ணையில் கண்டு பிடித்துள்ளது.
கடும் நிதி நெருக்கடி காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் தனது சேவையை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய நிலைக்கு ஆளானது. இதை அடுத்து திவால் நடவடிக்கைக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உட் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அதன் நிறுவனர் நரேஷ் கோயல் அந்நிய செலாவணி தொடர்பாக சட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாக நிறுவன விவகாரத் துறை அமைச் சகம் குற்றம்சாட்டியது. இதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை அன்று அவருடைய அலுவலகம், வீடு உட்பட 12 இடங்களில் அமலாக் கத் துறை சோதனை நடத்தியது.
சோதனையின்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அப்படி கைப்பற்றப்பட்ட ஆவணங் களை ஆய்வு செய்ததில் அவர் வரி ஏய்ப்பு செய்யும் வகையிலான பல்வேறு திட்டங்களை உரு வாக்கி பெருமளவிலான பணத்தை வெளிநாட்டு கணக்குகளில் குவித் திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தனது முதற்கட்ட விசாரணையில் கூறியுள்ளது. வெளி நாடுகளில் பல்வேறு நிறுவனங் களை மறைமுகமாக இவர் நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
நரேஷ் கோயல் பெயரில் 19 நிறுவனங்கள் இருப்பதாகவும் அவற்றில் ஐந்து வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிறுவனங்கள் மூலமாக போலியான திட்டங் களுக்கு பணப் பரிமாற்றங் கள் செய்யப்பட்டு பெருமள விலான பணம் வெளிநாட்டு கணக்கு களுக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான நிறுவனங்களில் நரேஷ் கோயல் மறைமுகமாகப் பங்கு வைத்திருப்பதாகவும் கூறப் படுகிறது. இந்த நிறுவனங்களில் சில வரி சொர்க்கம் என கூறப்படும் நாடுகளில் உள்ளன.
சட்டவிரோதமாக நடந்துள்ள தாகக் கூறப்படும் பரிவர்த்தனைகள் பெரும்பாலும் ஏர்லைன் குத்தகை ஒப்பந்தங்கள், விமானங்கள் மேலாண்மை ஒப்பந்தங்கள் ஆகிய வற்றின் பெயரில் செயல்படுத்தப் பட்டுள்ளன. குறிப்பாக துபாயில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத் தின் எக்ஸ்க்ளூசிவ் விற்பனை ஏஜென்சிக்குப் பெருமளவிலான தொகை பரிவர்த்தனை செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் பலனடை யும் முதல்நபராக நரேஷ் கோயலே இருக்கிறார் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.
இத்தகைய மோசடிகள் பலவும் அந்நிய செலாவணி நிர்வகிப்பு சட்டத்தின் விதிமீறல்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. வரி ஏய்ப்பு செய்ததாலும் கணக்கில் காட்டாத சொத்துகளை வெளிநாடு களில் குவித்துள்ளதாலும் நரேஷ் கோயல் விரைவில் கடுமையான சட்டங்களின்கீழ் கைது செய்யப் படலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். ஜெட் ஏர்வேஸின் தாய் நிறுவனமாகக் கருதப்படும் டெயில்விண்ட் கார்ப்பரேஷன் அம லாக்கத்துறையின் தீவிர விசாரணை வளையத்தில் உள்ளது. டெயில் விண்ட்ஸில் முதலீடு செய்யப் பட்ட பெருமளவிலான நிதி சட்ட விரோதமான வழிகளில் செய்யப்பட் டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மார்ச் மாதத்தில் தலைவர் பதவியிலிருந்து நரேஷ் கோயல் விலகினார். ஏப்ரல் மாதத்தில் ஜெட் ஏர்வேஸின் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட் டது. ஜூலை மாதத்தில் ஜெட் ஏர் வேஸ் கணக்குகளில் பல்வேறு மோசடிகள், விதிமீறல்கள் இருப் பதாக நிறுவன விவகாரத் துறை அமைச்சகம் குற்றம்சாட்டியது. தற்போது நிறுவனம் திவால் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்