Published : 24 Aug 2019 01:02 PM
Last Updated : 24 Aug 2019 01:02 PM

‘‘சீனாவில் இயங்கும் அமெரிக்க நிறுவனங்கள் உடனடியாக வெளியேற வேண்டும்’’ - ட்ரம்ப் கடும் கோபம்

வாஷிங்டன்

சீனாவுடனான வர்த்தகப் போரை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அந்நாட்டில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

பொருளாதார பிரச்சினைகளில் பல்வேறு நாடுகளுடனும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து மோதல் போக்கை கடை பிடித்து வருகிறார். இதனால் உலகளாவிய அளவில் வர்த்தகப் போராக மாறி வருகிறது.

குறிப்பாக வர்த்தக விவகாரங்களில் சீனாவும், அமெரிக்காவும் தற்போது கடுமையாக மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றன. இரு நாடுகளும் மாறி மாறி இறக்குமதி வரியை அதிகரித்து வருகின்றன.

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் செல்போன்கள், பொம்மைகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார். மேலும் 250 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதலாக 5 சதவீதம் வரி விதித்தார்.
இதையடுத்து சீனாவும் பதில் நடவடிக்கைகளை எடுத்தது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 5 ஆயிரத்து 78 பொருட்களுக்கு 5 முதல் 10 சதவீதம் வரை கூடுதல் வரி விதித்தது. இதுமட்டுமின்றி, 75 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் 10 சதவிகித வரி விதிக்கப்படும் என்று அறிவித்தது.

இந்தநிலையில் கடும் கோபம் கொண்டுள்ள அதிபர் ட்ரம்ப் சீன பொருட்களுக்கு மேலும் 5 சதவீத கூடுதல் வரியை விதித்துள்ளார். இதுமட்டுமினறி சீனாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள் உடனே வெளியேற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘சீனா உண்மையாகவே நமக்கு தேவையில்லை. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க பணம் விரயமாவதும், இது அதிகரித்துக் கொண்டே போவதும் தொடர்கிறது. அமெரிக்க நிறுவனங்கள் சீனாவுக்கு மாற்றாக மற்றொரு இடத்தைத் தேட தொடங்கி உள்ளன’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x