

மும்பை
ஜெட் ஏர்வேஸின் நிறுவனர் நரேஷ் கோயலின் வீடு மற் றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை நேற்று சோதனையில் ஈடு பட்டது. டெல்லி மற்றும் மும்பை யில் உள்ள அவருக்கு தொடர் புடைய 12 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மீதான அந்நிய செலாவணி முறை கேடு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2012-ம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், அதன் சந்தை செயல்பாட்டுக்கென தனியாக ஜெட் பிரிவிலேஜ் என்று ஒரு நிறுவனத்தை உருவாக்கி இருந்தது. அது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டு வந்தது. அதன் பிறகு 2014-ம் ஆண்டு அபுதாபியைச் சேர்ந்த எதியாட் நிறுவனம் ஜெட் பிரிவிலேஜ் நிறுவனத்தின் 50.1 சதவீத பங்குகளை வாங்கியது. மீதமுள்ள 49.9 சதவீத பங்குகளை ஜெட் ஏர்வேஸ் கொண்டிருந்தது. இது தொடர்பாக இரு நிறுவனங் களுக்கு இடையே ரூ.900 கோடி அளவில் ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டு இருந்தது. இது தொடர்பான விசாரணையின் பகுதியாகவே இந்த சோதனை மேற்கொள்ளப் பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அந்நிய நிறுவனங்கள் இந்தியா வில் உள்ள பல்வேறு துறைகளில் 49 சதவீதத்துக்கு மேல் முதலீடு செய்யக் கூடாது என்பது ஒரு விதியாக உள்ளது. ஆனால் இந்த வழக்கில் எதியாட் நிறுவனம் 50.1 சதவீதம் அளவில் முதலீடு செய்துள்ளது. அதேசமயம் விமான சேவைத் துறையில் அந்நிய நிறு வனங்கள் 49 சதவீதத்துக்குமேல் முதலீடு செய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலை யில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மற்றும் எதியாட் நிறுவனத்துக்கு இடையேயான பரிவர்த்தனை முறையான விதிமுறைக்கு உட் பட்டு மேற்கொள்ளப்பட்டு இருக் கிறதா என்பதை கண்டறியவே இந்த சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த மே மாதம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை அமலாக்கத் துறை விசாரித்துள்ளது. அதைத் தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
1992- ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடும் நிதி நெருக்கடிக்கு உள் ளாகிய நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தனது விமான சேவை நிறுத்தியது. அந்நிறுவனத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி அளவில் கடன் உள்ளது.
அது தொடர்பான விசாரணை யில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத் தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பது கண்டறியப் பட்டன. இந்நிலையில் அந்நிறு வனத்தின் மீது விசாரணை நடை பெற்று வருகிறது. அந்த விசாரணை கள் அனைத்தையும் ஆறு மாதங் களுக்கு முடிக்க வேண்டும் என்று தீவிர மோசடிகளை விசாரிக்கும் அமைப்பான எஸ்எஃப்ஐஓ கூறி யுள்ளது. வழக்கு விசாரணை நடை பெற்று வருவதால் நரேஷ் கோயல் வெளிநாடுகளுக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என் பது குறிப்பிடத்தக்கது.