Published : 24 Aug 2019 09:35 AM
Last Updated : 24 Aug 2019 09:35 AM

5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியா வளர சிறு, குறுந்தொழில் துறையில் 5 கோடி வேலை வாய்ப்புகள்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தல்

புதுடெல்லி

நாட்டில் வேலையில்லாத் திண் டாட்டம் மிகப் பெரும் சவாலாக உருவெடுத்து வருகிறது. இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலரை எட்ட வேண்டுமென்றால் சிறு, குறுந்தொழில்துறையின் பங் களிப்பு அதிகரிக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் இத்துறை மூலம் 5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.

தற்போது சிறு, குறு மற் றும் நடுத்தர (எம்எஸ்எம்இ) தொழில் துறையின் பங்களிப்பு நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி யில் (ஜிடிபி) 29 சதவீத அளவுக்கு உள்ளது. இத்துறை மூலம் 11 கோடி வேலை வாய்ப்புகள் சமீப காலங் களில் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தியாவை 5 டிரில்லியன் பொருளாதார நாடாக உருவெடுக் கச் செய்யும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு எம்எஸ்எம்இ துறையின் பங்களிப்பு ஜிடிபி-யில் 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த இலக்கை எட்டும்போது இத்துறையில் கூடுத லாக 5 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

டெல்லியில் நடைபெற்ற 6-வது இந்தியா சர்வதேச எம்எஸ்எம்இ ஏற்றுமதி மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகையில் அவர் மேலும் கூறியதாவது: எம்எஸ்எம்இ துறையினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. பிரச் சினைகளுக்கு தீர்வு காண்பதோடு இத்துறையினரின் தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் பணியிலும் இத் துறையினருக்கு உரிய நேரத்தில் நிதி கிடைக்கவும் முயற்சிகள் எடுக் கப்பட்டு வருகின்றன என்றார்.

சீனாவின் மிகப்பெரும் இணைய தள நிறுவனமான அலிபாபா, அந் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எந்த அளவுக்கு முக்கிய பங்காற்றி யது என்று குறிப்பிட்ட அவர், மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை ஆன் லைன் சந்தையை உருவாக்க வர்த்தக அமைச்சகத்துடன் ஒப்பந் தம் செய்துள்ளது என்பதைத் தெரி வித்தார். புதிதாக உருவாக்கப்படும் இணையதளத்துக்கு ‘பாரத் கிராப்ட்’ என பெயர் சூட்டப்படும். இந்த ஆன் லைன் இணையதளமானது அலி பாபா மற்றும் அமேசான் இணைய தளத்துக்கு இணையானதாக இருக் கும் என்றார். இந்த இணையதளம் மூலம் ரூ. 10 லட்சம் கோடிக்கு வர்த்தகம் புரிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கட்கரி குறிப்பிட்டார்.

எம்எஸ்எம்இ துறையினரின் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய சமயத்தில் பணம் கிடைக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இத்துறையினர் மூல தன தட்டுப்பாடு ஏற்படாமல் சமாளிக்க வழியேற்படுத்தப்படுவ தாக அவர் கூறினார். இத்துறை யினருக்கு 45 நாட்களுக்குள் தொகை வழங்குவதை கட்டாய மாக்கும் சட்டத்தை இயற்றுவது குறித்தும் பரிசீலித்து வருவதாக கட்கரி கூறினார்.

நாட்டில் அதிக அளவுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் இத்துறைக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவது குறித்து உலக வங்கி, ஆசிய மேம்பாட்டு வங்கி உள்ளிட்டவற்றுடன் பேச்சு நடத்தியதாகவும் கட்கரி கூறினார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதி கண்காட்சி பிரகதி மைதானத்தில் 25-ம் தேதி வரை நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x