Published : 23 Aug 2019 05:05 PM
Last Updated : 23 Aug 2019 05:05 PM

நிதி ஆயோக் மீது  ஆர்.எஸ்.எஸ் சார்பு தொழிற்சங்கம் விமர்சனம்

பிரதிநிதித்துவப் படம்: கோப்பு.

கடந்த வார இறுதியில் டெல்லியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். சார்பு பாரத் மஸ்தூர் சங்கத்தின் 144வது தேசியக் குழு கூட்டத்தில் மத்திய அரசின் ‘தவறான’ பொருளாதார மற்றும் தொழிலாளர் கொள்கைகளுக்காக விமர்சனங்களை முன்வைத்தது.

ஆனாலும் மத்திய அரசு பொருளாதாரத்தை முன்னேற்ற தங்களால் இயன்றதை முயற்சி செய்கிறது, திறன் வளர்ச்சியிலும் முயற்சிகள் காட்டினாலும் இம்முயற்சிகள் கொள்கை வகுப்பு குழுக்களினால் தவறான திசையில் செல்கிறது என்று விமர்சனம் செய்தது.

“இவர்களது முக்கியமான பங்கு என்னவெனில் இந்தியப் பொருளாதாரத்தை முதலாளித்துவ பொருளாதாரமாக மாற்றுவதில்தான் முடிந்துள்ளது மற்ற வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் இதன் கிளைச் செயல்பாடுகளாகவே முடிந்துள்ளது” என்று அந்த அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“மேற்கத்திய ரேட்டிங் ஏஜென்சிகளும் உலக வர்த்தகக் கழகம், உலக வங்கி, பன்னாட்டு நிதியம் (ஐ.எம்.எப்) ஆகியவற்றின் கொள்கைத் திட்டங்களுக்கு உடன்பாடாக நம் பொருளாதாரக் கொள்கைகள் அமைவதை விட இந்திய மைய வளர்ச்சித் திட்டமே அவசியம்” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் நிதி ஆயோகை மறு அமைப்பாக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் மஸ்தூர் யூனியன் “ஹார்வர்ட் பல்கலைக் கழக நிபுணர்களுக்கு இந்தியப் பொருளாதாரம் நிலவரங்கள் பற்றி என்ன தெரியும்? ஆனால் அவர்கள் கூறுவதுதான் இவர்களிடத்தில் செல்லுபடியாகிறது” என்கிறது அந்த அறிக்கை.

சம்பள மசோதாவை வரவேற்பதாகக் கூறிய மஸ்தூர் யூனியன், ஆனால் அதில் உள்ள தொழிலாளர் விரோத பிரிவுகளை விமர்சனம் செய்துள்ளது. மேலும் தனியார்மயம் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது என்றும் மஸ்தூர் யூனியன் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x