Published : 23 Aug 2019 11:49 AM
Last Updated : 23 Aug 2019 11:49 AM

உலக வர்த்தக அமைப்பில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள் சரி செய்யப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தல்

புதுடெல்லி

உலக வர்த்தக அமைப்பில் (டபிள்யூடிஓ) சீர்திருத்தம் கொண்டுவருவதற்கு முன்பு, அதில் தற்போது நிலவும் ஏற்றத் தாழ்வுகளை சரி செய்ய வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசு, உலக வர்த்தக அமைப்பில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று அவ் வமைப்பின் உறுப்பினர்களாக இருக்கும் பிற நாடுகளுக்கு அழைப்பு விடுத்து இருந்தது. அதைத் தொடர்ந்து, அவ்வமைப்பு தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சி யில் பியூஷ் கோயல் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

சீர்திருத்தம் என்பது முழுமை யான ஒன்றாக இருக்க வேண்டும். அது ஒரு சார்புடையதாக இருக்கக் கூடாது. தற்போது உலக வர்த்தக அமைப்பில் அனைத்து நிலை களிலும் ஏற்றத் தாழ்வுகள் நிகழ் கின்றன. அவை முதலில் சரி செய்யப் பட வேண்டும். உதாரணமாக மூன்று டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்டிருக்கும் நாடும் 20 டிரில்லியன் பொருளாதாரம் கொண் டிருக்கும் நாடும் ஒரே அளவிலான வர்த்தக ஒப்பந்தத்தை மேற் கொள்ள முடியாது. பொருளாதார அளவில் வளர்ந்து வரும் நாடு களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

உலக வர்த்தக அமைப்பு என்பது உலக நாடுகளுக்கிடையேயான வர்த்த உறவுக்கான விதி முறை களை கொண்ட அமைப்பு ஆகும். இந்த அமைப்பு 1995-ம் ஆண்டு ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியா உட்பட 164 உலக நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன.

முழு சீர்திருத்தம் வேண்டும்

இதில் உள்ள விதி முறைகளில் சீர் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்கா பிற நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக வளரும் நாடுகளுக்கு என்று சில சிறப்பு முன்னுரிமைகள் வழங்கப்படுகின்றன. அந்த விதிகளில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று அமெரிக்கா கோருகிறது. மேலும், நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்டு இருக்கும் தீர்ப்பாய்வு மையத்தின் விதிகளையும் மாற்ற வேண்டும் என்று அமெரிக்கா கோருகிறது.

இந்நிலையில்தான், சீர்திருத்தம் என்பது முழுமையான ஒன்றாக இருக்க வேண்டும். தனிப்பட்ட ஒரு நாட்டின் விருப்பத்துக்கு ஏற்ப குறிப் பிட்ட விதிகளில் மட்டும் மேற் கொள்ளப்படும் சீர்திருத்தம் முறை யான சீர்திருத்தம் ஆகாது என்று பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தியா எப்போதுமே திறந்த வர்த்தகத்துக்கான நாடாக இருந்து வருகிறது. ஆனால் முன்னேறிய பல நாடுகள் அவ்வாறு இருப் பதில்லை. வர்த்தக உறவில் பல் வேறு தடைகளை அந்நாடுகள் உரு வாக்கி வருகின்றன. தற்போதைய உலக சூழ்நிலையில் உலக நாடுகள் அனைத்தும் பரஸ்பர புரிதலுடன் செயல்பட வேண்டும். வர்த்தக உறவில் உருவாகும் விரிசல்கள், உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x