

தங்க நகை ஏற்றுமதி 2020-ம் ஆண்டுக்குள் ஐந்து மடங்காக உயர்ந்து, 4,000 கோடி டாலராக இருக்கும் என்று வேர்ல்டு கோல்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
தங்க நகை நுகர்வில் உலக அளவில் முக்கிய இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியா முழு வதும் பல்வேறு நகரங்களில் சுமார் 4 லட்சம் தங்க நகை விற்பனையாளர்கள் இருக்கின் றனர். பெருவாரியான தங்க நகை விற்பனையாளர்கள் ஹால்மார்க் தரச்சான்று பெற்று விடுகின்றனர்.
இந்திய தரச்சான்று குறித்த விஷயத்தில் அடுத்த கட்டத்தை குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்று வேர்டு கோல்டு கவுன்சிலின் இந்திய தலைவர் பி.ஆர்.சோமசுந்தரம் குறிப்பிட்டுள்ளார். அரசின் ஊக்குவிப்பு நடவடிக்கைகளைப் பொறுத்து தரமான உற்பத்திக்கு ஏற்ப மேலும் பல மையங்கள் திறக்கப்படும் என்றார்.
தங்க நகை ஏற்றுமதி குறித்து ராஜேஷ் எக்ஸ்போட்ர்ஸ் நிறுவனம் குறிப்பிடும்போது உலக அளவில் 4,000 கோடி டாலர் அளவுக்கு தங்க நகை ஏற்றுமதி வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.