

புதுடெல்லி
ஐடிசிநிறுவனம், காபி டே நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
ஐடிசி, நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க இந்திய நிறுவனம் ஆகும். சிகெரட் தயாரிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி நுகர்வோர் பொருள்கள் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இது தவிர நட்சத்திர ஹோட்டல்கள், வேளாண்துறை, தகவல் தொழில் நுட்பத் துறை என வெவ்வேறு துறைகளிலும் கால்பதித்து உள்ளது. அதன் தொடர்சியாக காபி விற்பனைத் துறையிலும் கால்பதிக்கும் முயற்சியாக, காபி டே நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் முயற்சியில் ஐடிசி இறங்கி உள்ளது.
காபி டே, இந்தியாவின் மிகப் பெரிய காபி விற்பனை நிலையம் ஆகும். அதன் நிறுவனர் வி.ஜி. சித்தார்த்தா சூழல் நெருக்கடி காரணமாக கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து அந்நிறுவனம் கூடுதல் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்க ஐடிசி நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக காபி டே நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை ஐடிசி நிறுவனம் பார்வையிட்டுள்ளது. ஐடிசி நிறுவனம் காபி டே-யின் பங்குகளை வாங்குவது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. காபிடே நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் முயற்சியில் சில வாரங்களுக்கு முன்பு கோகோ கோலா நிறுவனமும் ஈடுபட்டிருந்தது.