Published : 21 Aug 2019 01:24 PM
Last Updated : 21 Aug 2019 01:24 PM

விற்பனை சரிவு: வேலையிழப்பு ஏற்படலாம் என பார்லே நிறுவனம் அச்சம்

மாயங் ஷா

பிரபல பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனமான பார்லே, விறபனை சரிவின் காரணமாக 10,000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய நேரிடலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளது.

வரி விகித மாற்றத்தால் பிஸ்கெட்டுகளின் விலையை உயர்த்த நேர்ந்ததாகவும் அதனால் பிஸ்கட் விற்பனை சரிந்ததாகவும் குறிப்பாக கிராமப்புறங்களில் விற்பனையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டதாகவும் பார்லே குறிப்பிட்டுள்ளது.

தள்ளாடும் தொழில் துறை..

அண்மையில் ஆட்டோமொபைல் துறை சரிவு மிகப்பெரிய விவாதப் பொருளான சூழலில் தற்போது இந்த செய்தியும் வந்துள்ளது.

ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமான இந்தியா சமீப காலமாக ஆட்டோமொபைல் தொடங்கி சில்லறை வணிகம் வரை பல துறைகளில் மந்தநிலையை சந்தித்துள்ளது. இதனால் நிறைய தொழில் நிறுவனங்கள் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி வருகிறது. புதிதாக வேலை வாய்ப்புகளும் வழங்கப்படுவதில்லை. ஆட்டோமொபைல் துறையோ சரிவிலிருந்து மீள மத்திய அரசு சிறப்பு நிதியை அளிக்க வேண்டும் எனக் கோருகிறது.

பார்லே மட்டுமல்ல இந்த மாத தொடக்கத்தில் ப்ரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடடின் நிர்வாக இயக்குநர் வருண் பெர்ரி அண்மையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "மக்கள் ஐந்து ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கவும் இருமுறை யோசிகிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தில் ஏதோ பிரச்சினை இருக்கிறது" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x