

மும்பை
விழாக்கால சிறப்பு சலுகையாக எஸ்பிஐ குறைந்த வட்டியிலான கடன் திட்டத்தை அறிவித்துள்ளது. வீட்டுக் கடன், வாகனக் கடன், கல்விக் கடன் ஆகிய பிரிவுகளில் குறைந்த வட்டியிலான கடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பரிசீலனைக் கட்ட ணம் ஏதும் கிடையாது என்றும் எஸ்பிஐ அறிவித்துள்ளது. இந்த சலுகை செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக வங்கி வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள் ளது.
வீட்டுக் கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதம் 8.05 சதவீதமாகவும், வாகனக் கடன்களுக்கு 8.70 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு சலுகையாக தனி நபர் கடனாக ரூ.20 லட்சம் வரை வழங்குகிறது.
மாதத் தவணை சுமையை குறைப்பதற்காக கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அளவு 6 ஆண்டுகளாகவும், அதற்கான குறைந்தபட்ச வட்டி விகிதம் 10.75 சதவீதமாக நிர்ண யிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கல்விக் கடன்களுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1.50 கோடி வரை வழங்கப்படுகிறது. அதற்கான குறைந்தபட்ச வட்டி விகிதம் 8.25 சத வீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் 35 அடிப் படை புள்ளிகள் குறைத்தது. அதைத் தொடர்ந்து எஸ்பிஐ உட் பட பல்வேறு வங்கிகளும் வட்டி விகி தத்தை குறைத்தது. அந்த வட்டி விகித குறைப்பு முன்னதாகவே கடன் வாங்கியிருப்பவர்களுக்கும், புதிதாக கடன் வாங்க இருப்பவர் களுக்கும் இது பொருந்தும்.
இந்நிலையில் எஸ்பிஐ இந்த புதிய சிறப்பு சலுகையை அறிவித் துள்ளது. இந்த சலுகை எதுவரை பொருந்தும் என்பதற்கான கால அளவை அது அறிவிக்கவில்லை. விழாக்காலம் நெருங்க உள்ள நிலையில் எஸ்பிஐயின் இந்த அறி விப்பு வாடிக்கையாளர்களுக்கு பயன் உள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.