

சென்னை
இருசக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான டயர் தயாரிப் பில் ஈடுபட்டு வரும் டிவிஎஸ் குழு மத்தின் ஒரு அங்கமான டிவிஎஸ் சக்கரா நிறுவனம், நேற்று சென் னையில் ‘டிவிஎஸ் யூரோகிரிப்’ என்ற அதன் புதிய பிராண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.
மணிக்கு 270 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிப்பதற்கும் ஏற்ற வகையிலான டயர்கள் இந்தப் புதிய பிராண்டின் கீழ் உருவாக்கப் படுகிறது. அந்நிறுவனத்தின் தலை வர் பி.னிவாசவரதன், நிர்வாகத் துணைத் தலைவர் பி.மாதவன், இயக்குநர் பி.விஜயராகவன், திட்ட துணைத் தலைவர் திருப்பதி குமார் ரவி ஆகியோர் இந்த புதிய பிராண்டை அறிமுகம் செய்தனர்.
தற்போதைய தலைமுறை இளைஞர்களின் எதிர்பார்ப்பை அடிப்படையாக் கொண்டே ‘டிவிஎஸ் யூரோகிரிப்' அறிமுகப் படுத்தப்படுவதாக நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் மாத வன் தெரிவித்தார். இந்தப் புதிய பிராண்டின்கீழ் ஜீரோ டிகிரி ஸ்டீல் பெல்ட்டட் ரேடியல் டயர்கள் உட்பட 19 வகையிலான பிரீமியம் டயர்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
தமிழ்நாட்டில் மதுரை மற்றும் உத்தராகண்ட்டில் பந்தர் ஆகிய இடங்களின் சக்கர தயாரிப்பு ஆலை களைக் கொண்டிருக்கும் இந்நிறுவ னம், இந்தப் புதிய பிராண்டை மேலும் விரவுபடுத்துவதற்காக இத்தாலியின் மிலன் நகரில் ஆய்வு மையம் ஒன்றையும் நிறுவியுள்ளது.