Published : 21 Aug 2019 10:26 AM
Last Updated : 21 Aug 2019 10:26 AM

இந்தியாவின் மனிதவளத்தை மேம்படுத்த மருத்துவத்துறையின் தரத்தை உயர்த்த வேண்டும்: நிதி ஆயோக் உறுப்பினர் வலியுறுத்தல்

புதுடெல்லி

இந்தியாவின் மனித வளத்தை மேம்படுத்த மருத்துவத் துறையின் தரத்தை உயர்த்த வேண்டியது அவசியம் என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் ஃபிக்கி ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் அவர் இக்கருத்தை வலியுறுத்தினார்.

தற்போதைய காலகட்டத்தில் அனைத்துமே உரிய விகித கலவை யாக இருக்க வேண்டியது அவசி யம். உரிய தரம், திறமையான நபர்கள் உருவாக சுகாதாரத்துறை குறிப்பாக மருத்துவத் துறை சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் என்று அவர் குறிப் பிட்டார்.

மருத்துவத் துறையில் டாக்டர் களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதிலும் சிறப்பு மருத்து வர்களுக்கு பற்றாக்குறை நிலவு கிறது. இத்தகைய சூழலில் மருத் துவத் துறையில் தனியார் பங்கேற்பு மிகவும் அவசியம் என்று அவர் சுட்டிக் காட்டினார். 1,000 பேருக்கு ஒரு டாக்டர் என்ற நிலையை 2024-ல் மட்டுமே எட்ட முடியும் என் றும் அவர் குறிப்பிட்டார். மனிதவள மானது மருத்துவத்துடன் தொடர் புடையது. சிறப்பான மனித வளம் உருவாக மருத்துவத்துறை சிறப்பாக இருக்க வேண்டும். இதற்கு தனியார், அரசு இணைந்து செயல்படுவது சிறப்பாக இருக்கும் என்றார்.

மருத்துவத் துறையில் தற்போது சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. தனியாரும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி அளிக்கப்படுகிறது. முன்பு ஒரு தனிநபர் மட்டுமே மருத்துவக் கல்லூரி உருவாக்க அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது கூட் டாக பலர் சேர்ந்து மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வழி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மருத்துவக் கல்லூரி சிறப்பாக செயல்பட அத்துடன் இணைந்த மருத்துவமனை இருப்பது அவசியம்.

எனவே முதலில் மருத்துவமனை தொடங்கப்பட்டு பிறகு மருத்துவக் கல்லூரி தொடங்குவதே சிறப்பாக இருக்கும் என்றார். மருத்துவக் கல்வியில் தனியார் பங்களிப்பு கணிசமாக மேற்கொள்ளமுடியும் என்று சுட்டிக்காட்டிய அவர், தற்போது இந்தியாவுக்கு அதிக எண்ணிக்கையிலான மருத்துவர் களும், சிறப்பு மருத்துவர்களும் அவசியம் என்றார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டமானது தனியாரும் அரசும் இணைந்து செயல்பட வழியேற்படுத்தித் தந் துள்ளது. இதன் மூலம் மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை கிடைக்க வழியேற்பட்டுள்ளது என்றார். ஆயுஷ்மான் பாரத் திட்டமானது ஒரே இந்தியா, ஒரே நாடு, ஒரே மருத்துவத்துறை என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறது. இதனால் அரசு, தனியார் என்ற வரையறை இனிமேலும் இருக்காது என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் ஒட்டுமொத்த உள் நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சுகா தாரத்துறைக்கான பங்களிப்பை 2.5 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மருத்துவத்துறைக்கான ஒட்டு மொத்த ஒதுக்கீடானது மத்திய, மாநில அரசுகளின் கூட்டு ஒதுக்கீடாக இருக்கும்போதுதான் அதிகரிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்த கருத்தரங்கில் இந்திய மருத்துவத்துறை 2.0 என்ற அறிக்கையும் வெளியிடப் பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x