Published : 20 Aug 2019 08:36 AM
Last Updated : 20 Aug 2019 08:36 AM

ரெப்போ விகிதத்தின்படி வட்டியை நிர்ணயிக்க வேண்டும்: வங்கிகளுக்கு ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் வலியுறுத்தல்

மும்பை

வங்கிகள் அனைத்தும் ரெப்போ விகி தத்தைப் பின்பற்றி கடன் மற்றும் டெபாசிட்டு களுக்கான வட்டியை நிர்ணயிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.

பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப் பதால் பணப்புழக்கத்தையும் முதலீடுகளை யும் ஊக்குவிக்க ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறியுள்ளது. இந்த ஆண்டில் தொடர்ந்து நான்கு முறை வட்டி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி உட்பட பொதுத் துறை வங்கிகள் பலவும் ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதக் குறைப்பின் பலனை வாடிக்கையாளர்கள் பெறும் வகையில் கடன் மற்றும் டெபாசிட்டுகளுக்கான வட்டிகளை நிர்ணயம் செய்துவருகின்றன.

பொதுத் துறை வங்கிகளைப் போலவே தனியார் வங்கிகளும் ரெப்போ வட்டி விகி தத்தின் அடிப்படையில் கடன் மற்றும் டெபா சிட்டுகளின் வட்டிகளை நிர்ணயிக்க வேண் டிய நேரம் வந்துவிட்டது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் வலியுறுத்தி யுள்ளார். ஃபிக்கி அமைப்பு நடத்திய ஆண்டு வங்கியாளர்கள் கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் இதைத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ரெப்போ வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டு வந்த நிலையில் முதல் ஆளாக எஸ்பிஐ வங்கி மே மாதத்தில் தனது டெபாசிட்டுகளுக் கான வட்டியை ரெப்போ விகித அடிப்படை யில் நிர்ணயித்தது. ஜூலை மாதத்தில் கடனுக் கான வட்டியையும் ரெப்போ விகிதத்தின்படி நிர்ணயித்துள்ளது.

எஸ்பிஐ வங்கியைத் தொடர்ந்து பாங்க் ஆஃப் பரோடா, யூனியன் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட சில பொதுத் துறை வங்கிகள் ரெப்போ விகிதத்தின் அடிப் படையில் வட்டிகளை நிர்ணயம் செய்து வருகின்றன. இதை அனைத்து வங்கிகளும் செயல்படுத்த வேண்டும் என்பது அரசின் எதிர்பார்ப்பு. அப்போதுதான் வட்டி குறைப் பின் நோக்கம் நிறைவேறும். வாடிக்கையாளர் களுக்குப் பலன் தராத நடவடிக்கைகளால் எந்தப் பயணும் இல்லை. சந்தையில் பணப் புழக்கம் சீராக இருக்க வேண்டுமெனில் அனைத்து வங்கிகளும் இதற்கு தயாராக வேண்டும் என்று அவர் கூறினார்.

கடந்த நிதிக் கொள்கை கூட்டத்தில் வழக் கத்துக்கு மாறாக 35 அடிப்படை புள்ளிகள் ரொப்போ விகிதம் குறைக்கப்பட்டது. தற் போது 5.4 சதவீதமாக ரெப்போ விகிதம் உள் ளது. பொதுவாக வங்கிகளின் நிதி நிலை நெருக்கடியில் இருப்பதால் ரெப்போ விகிதத் தின்படி வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கட்டாயப்படுத்த முடி யாத நிலை உள்ளது. ஆனாலும், ரிசர்வ் வங்கி தனது கோரிக்கையை வலியுறுத்தி உள்ளது. இந்த மாற்றம் வேகமாக நடக்க வேண்டும். எனவே வங்கிகள் இதை செயல் படுத்துகின்றனவா என்பது கண்காணிக்கப் படும் என்றும், அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.

ஏற்கெனவே பொதுத் துறை வங்கிகளின் நிதி நிலை அரசை நம்பியிருக்கும் நிலையில் உள்ளது. சந்தை பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பது வங்கிகளுக்கும் சவா லான காலகட்டமாகத்தான் இருக்கிறது. எனவே ஒழுங்குமுறை ஆணையமாக ரிசர்வ் வங்கி இந்திய வங்கிகளின் நலனையும் கருத்தில்கொண்டே நடவடிக்கைகளைத் திட்டமிடும் என்றும் அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x