Published : 19 Aug 2019 10:11 AM
Last Updated : 19 Aug 2019 10:11 AM

உற்பத்தியை இருமடங்காக்க ஓஎன்ஜிசி இலக்கு

புதுடெல்லி

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஓஎன்ஜிசி என்று அழைக் கப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம், அதன் எண்ணெய் மற்றும் எரிவாயு உற் பத்தி அளவை இருமடங்காக அதி கரிக்கவும், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் திறனை மூன்று மடங்காக விரிவாக்கம் செய்யவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதுகுறித்து அதன் தலைவரி ஷசி சங்கர் கூறியதாவது,

“ஓஎன்ஜிசி நிறுவனம் தனது எரிசக்தி உற்பத்தி தொடர்பாக புதிய உத்திகளைத் திட்டமிட்டுள்ளது. ஓஎன்ஜிசி 2040 என்ற செயல்திட்ட வரைவு மூலம் இந்த உத்திகள் வகுக்கப்பட்டுள்ளன. அதில் முன்மொழியப்பட்டுள்ள திட் டங்களுக்கு நிறுவனத்தின் இயக்கு நர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் மறுபயன்பாட்டுக்கான எரிசக்தி உருவாக்கத்திலும் புதிய மாற்றங்களை அடைவதற்கான திட் டங்களும் உருவாக்கப்பட்டு இருப் பதாக அவர் தெரிவித்தார்.

2018-19 நிதி ஆண்டில் இந்நிறு வனத்தின் வருவாய் ரூ.109,654 கோடியாகவும், நிகர லாபம் ரூ.26,715 கோடியாகவும் உள்ளது. அதன் சந்தை மதிப்பு தற்போது ரூ.164,458 கோடியாக உள்ளது.

இந்நிலையில் ‘ஓஎன்ஜிசி 2040’ செயல்திட்டத்தின்படி, இந்நிறுவனம் 2040-ம் ஆண்டுக்குள் தற்போது இருப்பதைவிட மூன்று மடங்கு அதிக வருவாயையும், ஆறு மடங்கு சந்தை மதிப்பையும் கொண்டிருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற் கான செயல்திட்டங்கள் உரு வாக்கப்பட்டுள்ளது.

2018-19 நிதி ஆண்டில் 24.23 மில்லியன் டன் கச்சா எண் ணெய்யை உள்நாட்டு ஆலைகளின் வழியே இந்நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது. மேலும் 25.81 பில்லி யன் கன மீட்டர் அளவில் இயற்கை எரிவாயுவையும் அதே நிதியாண்டில் உற்பத்தி செய்துள் ளது.

தவிர, 10.1 மில்லியன் டன் கச்சா எண்ணெய் மற்றும் 4.736 பில்லியன் கன மீட்டர் அளவில் இயற்கை எரிவாயுவை வெளிநாட்டில் உள்ள அதன் ஆலைகளில் இருந்து உற்பத்தி செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x