இரண்டே நாளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.29,000 கோடி உயர்வு

இரண்டே நாளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.29,000 கோடி உயர்வு
Updated on
1 min read

புதுடெல்லி

கடந்த வாரம் திங்கள் கிழமை அன்று முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 11 சதவீதம் உயர்ந்தது.

இந்நிலையில் முகேஷ் அம்பானி யின் சொத்து மதிப்பில் ரூ.29 ஆயிரம் கோடி உயர்ந்துள்ளது. பொதுகூட்டம் முடிந்த இரண்டே நாட்களில் இந்த உயர்வு ஏற் பட்டுள்ளது.

அவருடைய மொத்த சொத்து மதிப்பு கடந்த மார்ச் மாதம் முடிவில், ரூ. 3,50,000 கோடியாக இருந்தது. இந்நிலையில் இரண்டே நாட்களில் அந்த சொத்து மதிப் பில் ரூ.29 ஆயிரம் கோடி உயர்ந் துள்ளது.

கடந்த வாரம் திங்கள் அன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42- வது பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் 20 சதவீத பங்குகளை சவூதி அரேபி யாவைச் சார்ந்த அராம்கோ நிறு வனத்துக்கு விற்பதற்கான முடிவு அறிவிக்கப்பட்டது.

அதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன்களை அடுத்த 18 மாதங்களுக்குள் முற்றிலும் குறைக்க திட்டமிடப்பட்டது.

மேலும், அடுத்த மாதம் ‘ஜியோ ஃபைபர்’ திட்டம் அறிமுகப் படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில் நிறுவனத் தின் பங்கு மதிப்பு 11 சதவீதம் உயர்ந்தது.

முந்தைய வாரம் வெள்ளிக் கிழமை ரூ.1,162 ஆக இருந்த நிறு வனத்தின் பங்கு மதிப்பு, வருடாந் திர பொதுக் கூட்டம் முடிந்த பிறகான இரண்டே நாட்களில் குறிப்பாக கடந்த புதன் கிழமை அன்று ரூ.1,288.30 ஆக உயர்ந்தது.

இதனால் முகேஷ் அம்பானி யின் சொத்து மதிப்பில் ரூ.28,684 கோடி அளவில் உயர்ந்தது. தற்போதைய நிலையில் உலக பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி 13-வது இடத் தில் உள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in