

நடப்பு நிதி ஆண்டில் ஒரு கோடி புதிய வரி செலுத்துபவர்களை இணைக்க மத்திய நேரடி வரி ஆணையம் இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. வரி செலுத்துபவர் வரம்பை அதிகரிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
இதனால் மத்திய நேரடி வரி ஆணையம் ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு புதிதாக எவ்வளவு நபர் களை இணைக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது.
வருமான வரித்துறை இந்தியாவை 18 மண்டலங்களாக பிரித்துள்ளது. புணே மண்டலத்துக்கு அதிகபட்ச இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த பகுதிக்கு 10.14 லட்சம் புதிய நபர்களை இணைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியாணா ஆகிய அனைத்து பகுதியை உள்ளடக்கிய மண்டலத்துக்கு 9.30 லட்சம் நபர்களை இணைக்க நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு 7.93 லட்சமும், குஜராத் பகுதிக்கு 7.86 லட்சமும், தமிழ்நாட்டுக்கு 7.64 லட்சம், மேற்கு வங்காளம், சிக்கிம் பகுதிக்கு 6.91 லட்சம், மும்பை பகுதிக்கு 6.23 லட்சமும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.