செய்திப்பிரிவு

Published : 17 Aug 2019 09:44 am

Updated : : 17 Aug 2019 09:44 am

 

தொடர் சரிவிலிருந்து மீண்ட பங்குச் சந்தை

share-market-rises

மும்பை

தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த பங்குச் சந்தை வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை ஏற்றம் பெற்றது. தொழில்துறைக்கு ஊக் கச் சலுகையை பிரதமர் வார இறுதியில் அறிவிப்பார் என்று வெளியான செய்தி பங்குச் சந்தை யில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளிலும் ஏற்றமான போக்கே காணப்பட்டது. அதேபோல டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பிலும் முன்னேற்றம் காணப்பட்டது.

தேக்க நிலையை சந்தித்துள்ள பொருளாதாரத்தை ஊக்குவிக்க சில சலுகைகளை அரசு அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பும், கச்சா எண்ணெய் விலை குறைந்தது உள் ளிட்ட நிகழ்வுகள் பங்குச் சந்தை உயர்வுக்கு வழிவகுத்தது. மும்பை பங்குச் சந்தை 38 புள்ளிகள் உயர்ந்து 37,530 புள்ளிகளில் முடிவடைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் 18 புள் ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 11,047-ல் நிலை கொண்டது.

கடந்த வாரம் பங்குச் சந்தைக்கு இரண்டு நாள் விடு முறை விடப்பட்டது. மூன்று நாள் வர்த்தகத்தில் சென்செக்ஸில் ஏற் பட்ட சரிவு 231 புள்ளிகளாகும். தேசிய பங்குச் சந்தையில் 61 புள்ளிகள் வரை சரிந்தது. கடந்த 6 வாரங்களில் 5 வாரங்கள் சரிவுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோமொபைல் துறை ஊக்கம் பெறும் என்ற நம்பிக்கை யில் மாருதி, ஹீரோமோட்டோ கார்ப், பஜாஜ் ஆட்டோ, மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனப் பங்குகள் விலைகள் உயர்ந்தன.


அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், கிளென்மார்க் பார்மா, அப்பல்லோ டயர்ஸ் உள்ளிட்ட பங்குகள் ஏற்றம் பெற்றன. வங்கித் துறையில் யெஸ் வங்கிப் பங்குகள் அதிக அளவில் (3.79%) உயர்ந்தன. இண்டஸ் இந்த் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கோடக் வங்தி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ பங்குகளும் கணிசமாக உயர்ந்தன.

டிசிஎஸ், வேதாந்தா, ஹெச்சி எல், ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. ஆட்டோ மொபைல், எரிசக்தி, வங்கி, தொலை தொடர்புத் துறை, ரியல் எஸ்டேட், நிதித்துறை பங்குகள் ஏற்றம் பெற்றன. அதேசமயம் ஐடி, உலோகம், சுகாதாரம் சார்ந்த நிறுவன பங்குகள் சரிவைச் சந்தித்தன.

டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ.71.14 என்ற விலையில் வர்த்தகமானது.

Share marketபங்குச் சந்தை
Popular Articles

You May Like

More From This Category

More From this Author