

புதுடெல்லி
நிதி சார்ந்த மற்றும் ஜிமெயில் போன்ற கணக்குகளுக்கு பாது காப்பற்ற எளிதில் கண்டறியக் கூடிய கடவுச்சொற்களைப் பயன் படுத்துவது வாடிக்கையாளர்கள் எளிதில் மோசடிக்கு ஆளாகும் ஆபத்தை ஏற்படுத்தும் என கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது.
இன்றைய சூழலில் எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டன. எல்லா வற்றுக்கும் தனிப்பட்ட கணக்கு கள் தேவைப்படுகின்றன. அவற் றுக்கு கடவுச் சொற்களைப் பயன் படுத்தும்போது எளிதில் பிறர் கண்டுபிடிக்கக் கூடிய வகை யிலும், திரும்பத் திரும்ப ஒரே கடவுச்சொல்லையும் பெரும் பாலானோர் பயன்படுத்துகிறார்கள் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. தனித்துவமான கடவுச்சொற்களை உருவாக்கும் வகையில் ஆன்லைன் சேவை நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியிருந்தாலும், பெரும்பாலானோர் கடவுச்சொல் விஷயத்தில் விழிப்புணர்வு இன்றி இருக்கிறார்கள்.
ஹேக்கர்கள் பெரும்பாலா னோரின் கணக்குகளில் நுழைய முயற்சித்திருப்பதாக சமீபத்தில் நடத்திய ஆய்வில் கூகுள் நிறுவனம் கண்டறிந்துள்ளது. பிறருக்கு எளிதில் தெரியும் வகை யில் உள்ள தகவல்களை வைத்து கடவுச்சொற்களை உருவாக்கு வதன் மூலம் ஹேக்கர்களுக்கும், மோசடி செய்பவர்களுக்கும் நாமே நம்முடைய கணக்குகளின் சாவியைக் கொடுப்பதுபோல் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2 கோடி கூகுள் கணக்குகளை ஆராய்ந்ததில் 3 லட்சத்துக்கும் மேலான கணக்குகள் எளி தில் கண்டறியக்கூடிய கடவுச் சொற்களைக் கொண்டிருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள் ளது.
ஆபத்தை தவிர்க்கலாம்
இணையத்தைப் பயன்படுத்து பவர்கள் தங்களுக்கு மட்டுமே தெரிந்த வகையில் தனித்துவமான கடவுச் சொற்களை உருவாக்கும் போது மோசடிக்கு ஆளாகும் ஆபத்துகளைத் தவிர்க்க முடியும் என்றும் கூறியுள்ளது.
இணைய தாக்குதல்கள், அத்து மீறல்கள், மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் கடவுச்சொல் விஷயத் தில் கவனமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.