Published : 29 May 2014 10:00 AM
Last Updated : 29 May 2014 10:00 AM

வினீத் தனேஜா - இவரைத் தெரியுமா?

$ மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.

$ இதற்கு முன்பு சாம்சங் நிறுவனத்தின் இந்திய தலைவராக இருந்தார். கடந்த வருடம் மார்ச் மாதத்தில் சாம்சங் நிறுவனத்தில் இணைந்த இவர் ஒன்றரை ஆண்டுகளில் வெளியேறிவிட்டார்.

$ சாம்சங் நிறுவனத்தில் சேரும் முன்பு பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் இலங்கை மற்றும் தென் இந்தியாவின் செயல்பாடுகளை கவனித்துக்கொண்டார்.

$ கார்ப்பரேட் துறையில் 25 வருடங்களுக்கு மேலான அனுபவம் கொண்டவர். நோக்கியா, ஹிந்துஸ்தான் யூனிலிவர் ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்தவர்.

$ 1989-ம் ஆண்டு ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தில் கார்ப்பரேட் வாழ்க்கையை ஆரம்பித்ததாக அவருடைய லிங்கிடின் கணக்கு தெரிவிக்கிறது.

$ ஐ.ஐ.டி. ரூர்கேலாவில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கும், ஐ.ஐ.எம். கொல்கத்தாவில் நிர்வாகப்படிப்பும் படித்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x