Published : 16 Aug 2019 08:57 AM
Last Updated : 16 Aug 2019 08:57 AM

ஏடிஎம் பரிவர்த்தனை: வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு

மும்பை

ஏடிஎம்களில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனையின்போது, தொழில்நுட்பக் கோளாறு காரண மாகவோ அல்லது போதிய பணம் நிரப்பப்படாத காரணத்தினாலோ பணம் வராவிட்டால், அந்த பரிவர்த்தனை முயற்சியை, அம் மாதத்துக்கான இலவச பரிவர்த் தனை கணக்கில் சேர்க்கக் கூடாது என்று வங்கிகளிடம் ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.

வங்கிகள் ஒவ்வொரு மாதத் துக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கை யில் மட்டுமே ஏடிஎம் வழியே இல வசமாக பரிவர்த்தனை மேற் கொள்ள அனுமதிக்கின்றன. அந் தக் குறிப்பிட்ட எண்ணிக்கையை விட அதிக அளவில் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும்போது, வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில சமயம் தொழில்நுட்பக் கோளாறு அல்லது ஏடிஎம்-ல் போதிய பணம் நிரப்பப்படாத காரணத்தினால் பரிவர்த்தனை தடைபட்டாலும், அந்த பரிவர்த்தனை முயற்சியும் அந்த மாதத்துக்கென்று அனுமதிக்கப்பட்ட இலவச பரிவர்த் தனை எண்ணிக்கையில் சேர்க்கப் படுகிறது. இதனால் வாடிக்கையா ளர்கள் ஏடிஎம்- ல் பணம் எடுப்பதில் சிரமத்தை சந்தித்து வந்தனர்.

இந்நிலையில், வங்கிகள் தொழில்நுட்பக் குளறுபடிகளால் தடைபடும் பரிவர்த்தனை முயற்சி களை இலவச பரிவர்த்தனை எண்ணிக்கையில் சேர்க்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி அறி வுறுத்தியுள்ளது. இது தவிர்த்து, ஏடிஎம் மூலமாக இருப்புத் தொகையை தெரிந்து கொள்ளு தல், பிற வங்கிகளுக்கு பணப் பரிவர்த்தனை செய்தல் போன்ற செயல்பாடுகளையும் அனுமதிக்கப்பட்ட இலவச ஏடிஎம் பரிவர்த்தனை கணக்கில் சேர்க்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x