ரிலையன்ஸ், அராம்கோ ஒப்பந்தத்தினால் இந்தியாவுக்கான எண்ணெய் ஏற்றுமதியில் சவூதி அரேபியா முன்னிலை வகிக்கும்

ரிலையன்ஸ், அராம்கோ ஒப்பந்தத்தினால் இந்தியாவுக்கான எண்ணெய் ஏற்றுமதியில் சவூதி அரேபியா முன்னிலை வகிக்கும்
Updated on
1 min read

புதுடெல்லி

ரிலையன்ஸ் எண்ணெய் சுத்தி கரிப்பு நிலையத்தின் 20 சதவீத பங்கு களை சவூதி அரேபிய நிறுவன மான அராம்கோ வாங்க உள்ளது. இதனால் இந்தியாவுக்கு எண் ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சவூதி அரேபியா மீண்டும் முதல் இடத்தை பிடிக்கும் என்று கூறப் படுகிறது.

சவூதி அரேபியா கடந்த நிதி யாண்டில் 40.33 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இந்தியா வுக்கு ஏற்றுமதி செய்தது. இதே காலத்தில் இராக் 46.61 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தது. இந்நிலையில், ரிலையன்ஸ் நிறு வனத்துடனான அராம்கோ நிறு வனத்தின் புதிய ஒப்பந்தத்தினால், மீண்டும் இந்தியாவுக்கான எண் ணெய் ஏற்றுமதியில் சவூதி அரேபியா முன்னிலை வகிக்கும் என்று தெரிகிறது.

அராம்கோ நிறுவனம் இந்தியா வில் தனது சந்தையை விரிவாக்கம் செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக ரிலையன்ஸ் நிறுவனத்துடன் எண்ணெய் மற்றும் ரசாயனம் சார்ந்த தொழிலில் 20 சதவீத பங்குகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தில் மேற் கொள்ளப்பட்டுள்ள அதிகபட்ச வெளிநாட்டு முதலீடு இதுவாகும்.

இந்த ஒப்பந்தத்தினால் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1.06 லட்சம் கோடி கிடைக்கும். மட்டுமல்லாமல், ஆண்டுக்கு 25 மில்லியன் டன் (2.5 கோடி) கச்சா எண்ணெய் ரிலை யன்ஸ் நிறுவனத்துக்கு அராம்கோ நிறுவனம் வழங்க உள்ளது.

இது ரிலையன்ஸ் நிறுவனம் மொத்தமாக மேற்கொள்ளும் எண்ணெய் கொள்முதலில் 40 சதவீதம் ஆகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in