Published : 14 Aug 2019 09:35 AM
Last Updated : 14 Aug 2019 09:36 AM
மும்பை
பங்குச் சந்தையில் நேற்று கடுமையான சரிவு காணப்பட்டது. வாரத் தின் தொடக்க நாளான திங்களன்று பக்ரீத் பண்டிகைக்காக பங்குச் சந்தைக்கு விடுமுறை விடப்பட்டது. மூன்று நாள் தொடர் விடுமுறைக்குப் பிறகு நேற்று பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியது. ஆரம்பம் முதலே சரிவு காணப்பட்டது. வர்த் தகம் முடிவில் மும்பை பங்குச் சந்தையில் 624 புள்ளிகள் சரிந்து 36,958 புள்ளிகளில் நின்றது. தேசிய பங்குச் சந்தையில் 183 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 10,925 புள்ளிகளானது.
டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பும் கடுமையான சரிவைச் சந்தித்தது. கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவாக ஒரு டாலருக்கு 71.25 என்ற மதிப்புக்கு ரூபாய் சரிந்தது. சர்வதேச அள வில் காணப்பட்ட ஸ்திரமற்ற சூழ லால் ரூபாய் மதிப்பு சரிந்ததாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். ஆர்ஜென்டீனாவின் பெசோ மதிப்பு கடுமையாக சரிந்தது. சீனாவில் உள்ள வங்கிகளின் வாராக் கடன் அதிகரிப்பும் சர்வதேச அளவில் ஸ்திரமற்ற சூழல் உருவாகக் காரணமானது. ஹாங்காங்கில் நடைபெறும் போராட்டம் சீனா வின் யுவான் மதிப்பு கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவடைய காரணமானது.
சீனா, அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போர் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு (2020) முடிவுக்கு வராது என்ற சூழல் உருவாகி யுள்ளது. ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கி வட்டிக் குறைப்பு நடவடிக்கையை எடுக்கும் என்று தெரிகிறது. இதேபோல ஸ்விட்சர் லாந்து மற்றும் ஜப்பான் நாட்டு வங்கிகளும் வட்டிக் குறைப்பில் ஈடுபடும் என தகவல்கள் வெளியாகி யுள்ளன. இதனால் சர்வதேச அள வில் ஸ்திரமற்ற சூழல் உருவாகி யுள்ளது.
இம்மாத தொடக்கத்திலிருந்தே டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இது வரை 3.5 சதவீத அளவுக்கு மதிப்பு குறைந்துள்ளது. இந்திய பங்குச் சந்தையிலிருந்து அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் வெளியேறி யதும் ரூபாய் மதிப்பு சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.
பங்குச் சந்தையில்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடன் சுமை இல்லாத நிறுவனமாக மாறும் என அதன் தலைவர் முகேஷ் அம்பானி வெளி யிட்ட தகவல் முதலீட்டாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அந்நிறு வனப் பங்கே 9.72 சதவீத அளவுக்கு உயர்ந்து பங்குச் சந்தையில் கடுமையான சரிவை ஓரளவுக்கு ஈடுகட்டியது. இதேபோல சன் பார்மா, பவர் கிரிட் ஆகிய இரு நிறுவனப் பங்குகளும் உயர்வை சந்தித்தன.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர் டெல், ஹெச்டிஎப்சி, மாருதி, டாடா ஸ்டீல், லார்சன் அண்ட் டூப்ரோ ஆகிய நிறுவனப் பங்குகள் 10.35 சதவீதம் வரை சரிந்தன.
ஆட்டோமொபைல் துறையின் பங்குகள் 18.71 சதவீதம் அளவுக் குச் சரிந்தன. 19 ஆண்டுகளில் இல் லாத அளவுக்கு வாகன விற்பனை சரிந்துள்ளதாக உற்பத்தியாளர் கூட்டமைப்பு தகவல் வெளியிட் டதைத் தொடர்ந்து இத்துறை பங்கு கள் சரிந்தன.
கடந்த மூன்று மாதங்களில் இத்துறையில் 15 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளதாக கூட் டமைப்பு வெளியிட்ட அறிக்கையும் முதலீட்டாளர்களை அச்சமடையச் செய்துள்ளது. இதுவே ஆட்டோ மொபைல் துறை பங்கு சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.