Published : 14 Aug 2019 09:26 AM
Last Updated : 14 Aug 2019 09:26 AM

அப்பல்லோ மருத்துவமனை லாபம் ரூ.49.15 கோடி

புதுடெல்லி

அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் என்டர் பிரைசஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு லாபம் இரண்டு மடங்கு அதிகரித்து ரூ. 49.15 கோடியை தொட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் லாபம் ரூ. 23.34 கோடியாக இருந்தது.

வருமானம் ரூ. 2,571 கோடி யாகும். முந்தைய ஆண்டு இது ரூ. 2,210 கோடியாக இருந்தது.

அப்பல்லோ மருத்துமனை தற் போது 7,348 படுக்கை வசதிகளுடன் செயல்படுகிறது. நேற்றைய வர்த்தகத்தில் அப்பல்லோ ஹாஸ் பிடல்ஸ் பங்கு விலை 1.60 சதவீதம் சரிந்து ரூ. 1,338.20 என்ற விலையில் வர்த்தகமானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x