செய்திப்பிரிவு

Published : 13 Aug 2019 12:23 pm

Updated : : 13 Aug 2019 12:24 pm

 

2-வது பெரிய வெளிநாட்டு முதலீடு: சவுதி அராம்கோவுடன் கைகோர்க்கும் முகேஷ் அம்பானி

reliance-industries

மும்பை

ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 5.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 20 சதவீத பங்குகளை உலகின் மிகப் பெரிய பெட்ரோலிய உற்பத்தி நிறுவனமான சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனம் வாங்குகிறது. இந்தியா நிறுவனத்தில் செய்யப்படும் 2வது பெரிய முதலீடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

சவுதி அராம்கோ உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று. சவுதி அரேபியா அரசின் தேசிய நிறுவனமான அராம்கோ, உலகின் பட்டியலிடப்படாத அரசு நிறுவனங்களில் உலகின் மிகப்பெரிய நிறுவனமாகும். இதன் சொத்து மதிப்பு 8 டிரில்லியன் டாலர்களாகும். இந்த நிறுவனம் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மட்டுமின்றி கச்சா எண்ணெய் வயல்களையும் நேரடியாக பரமாரித்து வருகிறது.

இந்தநிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை அராம்கோ நிறுவனம வாங்கியுள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 5.3 லட்சம் கோடி ரூபாயாகும். இதன் மூலம் கிடைக்க பெறும் பணத்தை ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ மற்றும் தனது பிற நிறுவனங்களில் முதலீடு செய்யும் எனத்தெரிகிறது.

பங்குகள் விற்பனை தவிர இந்த ஒப்பந்தத்தின்படி சவுதி அராம்கோ நிறுவனம் தினமும் 5,00,000 கச்சா எண்ணெய் பேரல்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும். குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைக்கு இந்த கச்சா எண்ணெய் வழங்கப்படும். இதனை சுத்திரித்து இந்தியாவில் விற்பனை செய்யும் பணியை ரிலையன்ஸ் மேற்கொள்கிறது.

ரிலையன்ஸ் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அதிகபட்ச வெளிநாட்டு முதலீடு இதுவாகும். அதுபோலவே இந்திய நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ள 2-வது அதிகபட்ச முதலீடு இது என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வால்மார்ட் - பிளிப்கார்ட் இடையே கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முதலிடே இந்திய நிறுவனத்தில் செய்யப்பட்ட அதிகபட்ச வெளிநாட்டு முதலீடாகும்.

முகேஷ் அம்பானிரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ்அராம்கோReliance Industries

Popular Articles

You May Like

More From This Category

More From this Author