

புதுடெல்லி
நிதி நெருக்கடியில் தரையிறக்கப்பட்டுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் மேலும் முதலீடு செய்யும் திட்டம் ஏதும் இல்லை என்று எதியாட் ஏர்வேஸ் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் எதியாட் ஏர்வேஸுக்கு 24 சதவீத பங்குகள் உள்ளன. இந்நிலையில் இந்நிறுவனத்தை அனில் அகர்வாலுக்கு சொந்தமான நிறுவனங்கள் உள்ளிட்ட சில நிறுவனங்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெட் ஏர்வேஸில் இன்னமும் தீர்வு காணப்படாத பல கேள்விகள் உள்ளன. இதனால் இதில் மறு முதலீடு செய்யும் திட்டம்இல்லை என்று நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெட் ஏர்வேஸை வாங்குவதற்கான விருப்ப மனு (இஓஐ) தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. நிறுவனத்தின் இந்த முடிவால், இந்தியாவில் தங்களது சேவையை விரிவுபடுத்தும் நோக்கம் பாதிக்கப்படாது என்று எதியாட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.