

எம்-காமர்ஸ் நிறுவனமான மிந்திரா (பிளிப்கார்ட் குழுமத்தை சேர்ந்தது) நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக ஆனந்த் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொள்வார்.
தற்போதைய தலைமைச் செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான முகேஷ் பன்சால் நிறுவனத்தின் இயக்குநர் குழு தலைவராக இருப்பார். இதில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வர்த்தகம், மிந்திரா நிறுவனத்தின் உத்தி உள்ளிட்ட பணிகளை கவனிப்பார்.
ஆனந்த் நாராயணன் தற்போது மெக்கென்ஸி நிறுவனத்தின் இயக்குநராக இருக்கிறார். கடந்த 15 வருடங்களாக மெக்கென்ஸி நிறுவனத்தின் சிகாகோ, ஷாங்காய், தைபே மற்றும் சென்னை ஆகிய பிரிவுகளில் பணியாற்றி இருக்கிறார். இனி மிந்திரா நிறுவனத்தின் பெங்களூரு தலைமையகத்தில் பணிபுரிவார்.
2014-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 40 வயதுக்குள் இருக்கும் 40 சிறந்த பிஸினஸ் தலைவர்கள் பட்டியலில் நாராயணனும் ஒருவர். மெக்கென்ஸி நிறுவனத்தின் புராடக்ட் மேம்பாடு பிரிவில் சர்வதேச அனுபவம் வாய்ந்தவர்.
என்னுடைய புராடக்ட் மேம்பாட்டு அனுபவத்தின் அடிப் படையிலேயே தேர்வு செய்திருக் கிறார்கள் யார் வாடிக்கையாளர், அவர்களுக்கு என்ன தேவை, அவர்களுடைய ஷாப்பிங் அனுபவத்தை எளிதாக்குவது இவைதான் முக்கியம்.
இதை மெக்கென்ஸியின் சென்னை அலுவலகத்தில் செய்திருக்கிறேன். தவிர செயல் பாடுகள் மற்றும் சப்ளை செயின் பிரிவில் கொண்டுள்ள அனுபவம் போன்றவை இ-காமர்ஸ் துறைக்கு பயன்படும் என்பதால் நான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன் என நாராயணன் தெரிவித்தார்.
மிந்திரா இப்போது வளர்ந்து வரும் பேஷன் ரீடெய்ல் நிறுவனம். அடுத்த கட்ட வளர்ச் சிக்கு தயாராகி வருகிறது. பிளிப்கார்ட் மற்றும் மிந்திரா நிறுவனங்களில் பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.
சென்னை பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டமும், மிச்சிகன் பல்கலைக்கழகத் தில் முதுகலை பட்டமும் பயின்றவர்.
சமீபத்தில் பிளிப்கார்ட் நிறுவ னத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக சாய்கிரண் கிரண் கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப் பட்டார்.
அதேபோல மிந்திரா நிறுவ னத்தின் தலைவராக (தனியார் பிராண்டு பிரிவு) அபிஷேக் வர்மா நியமிக்கப்பட்டார். இருவரும் மெக்கென்ஸி நிறுவனத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.