Published : 12 Aug 2019 10:57 AM
Last Updated : 12 Aug 2019 10:57 AM

பொருளாதார வளர்ச்சிக்கு உள்ள தடைகள் விரைவில் நீக்கப்படும்: மத்திய அரசு நம்பிக்கை

வீடு வாங்குவோர் நலச் சங்கப் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு தலைமை வகித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நகர் மேம்பாட்டு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி.

புதுடெல்லி

தற்போது இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ள காரணிகளை நீக்குவதற்கான திட்டங்களை அரசு வகுத்து வருவதாகவும் விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சராக நிர்மலா சீதா ராமன் பொறுப்பேற்றது முதல் அடுத்தடுத்து பல்வேறு தொழில் துறையினருடன் ஆலோசனை கூட் டங்களை நடத்திவருகிறார். இந்தக் கூட்டங்களில் தொழில் துறையினர் கூறிய கருத்துகள் யோசனைகள் அடிப்படையில் புதிய திட்டங்கள், கொள்கைகள் வகுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

நேற்று நிதியமையச்சர் ரியல் எஸ்டேட் துறையினர் மற்றும் வீடு வாங்குவோர் சங்கத்தினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது ரியல் எஸ்டேட் துறையில் உள்ள பிரச்சினைகள் அடையாளம் காணப் பட்டு அவற்றை சரிசெய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என் றும் தேவையான திட்டங்கள் வகுக் கப்படும் என்றும் கூறியுள்ளார். ரியல் எஸ்டேட் துறை மீண்டும் பழைய வளர்ச்சிப் பாதையில் பய ணிக்க வழிசெய்யப்படும் என உறுதியளித்ததாக ரியல் எஸ்டேட் துறை அமைப்புகளான கிரடாய், நாரெட்கோ அமைப்பினர் தெரிவித் துள்ளனர்.

இதுவரை நிதியமைச்சர் நடத் திய ஆலோசனைக் கூட்டங்களி லிருந்து பெறப்பட்ட எதிர்வினை களின் அடிப்படையில் பொருளா தாரத்தை ஊக்குவிப்பதற்கான சில முடிவுகளை அரசு திட்ட மிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வளர்ச்சிக்கு தடையாக உள்ள காரணிகளை நீக்கி முன்னேற்றப் பாதையில் பொருளாதாரத்தைக் கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொழில் செய்வதற்கு ஏற்ற சூழல் மேலும் எளிமையாக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. எளிதில் கடன் கிடைக்க வழி செய்வது, பணப்புழக்கத்தை சீராக் குவது, கட்டண சுமைகளைக் குறைப்பது, வரி நடைமுறைகளை எளிதாக்குவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனக்கூறப் பட்டுள்ளது. ஏற்கெனவே ஜிஎஸ்டி விகிதங்கள் குறைவாக இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டுக்கு அரசு 7 சதவீத வளர்ச்சியை இலக்காக வைத்துள்ளது. வரி வருவாயைப் பொருத்தவரை ஜிஎஸ்டி வசூல் ஜூலை மாதத்தில் சற்று உயர்ந்து ரூ.1.02 லட்சம் கோடியாக உள்ளது. முதல் காலாண்டில் ஜிஎஸ்டி வருவாய் 9 சதவீதமும், நேரடி வரி வருவாய் 12.9 சதவீதமும் உயர்ந்துள்ளது. நிறுவன வரி 13.3 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x