Published : 11 Aug 2019 09:05 AM
Last Updated : 11 Aug 2019 09:05 AM

கிராமங்களில் ஏடிஎம்கள் அமைக்க அரசு உதவ வேண்டும்: சிஏடிஎம்ஐ–யின் இயக்குநர் ராதா ராமதுரை கருத்து

மும்பை

கிராமப்புறங்களில் தேவையான அளவில் ஏடிஎம்கள் நிறுவப்பட வில்லை. இதனால் கிராமப்புற மக்கள் தங்கள் பணப்பரிவர்த்தனை தேவைக்கு சிரமங்களை எதிர் கொள்கின்றனர். எனவே, கிராமங் களில் ஏடிஎம்கள் அமைப்பதற்காக வங்கிகள் மற்றும் ஏடிஎம் நிறுவ னங்களுக்கு அரசு மானியம் அளிக்க வேண்டும் என்று ஏடிஎம் நிறுவனங்களின் கூட்டமைப்பு இயக்குநர் ராதா ராமதுரை தெரிவித்துள்ளார்.

கிராமங்களில் ஒரு லட்சம் நபர் களுக்கு 5 ஏடிஎம்களே உள்ளன. ஆனால் நகரங்களில் ஒரு லட்சம் நபர்களுக்கு சராசரியாக 50 ஏடிஎம்கள் உள்ளன.

இதுகுறித்து சிஏடிஎம்ஐ யின் இயக்குநர் ராதா ராமதுரை கூறிய போது, கிராமங்களில் போதிய அளவில் ஏடிஎம்கள் இல்லை. ஏடிஎம்களை அமைப்பது மற்றும் அதனை பராமரிப்பதற்கென்று அதிக அளவில் செலவாகின்றன. இதனால் பல்வேறு வங்கிகள் ஏடிஎம்கள் அமைப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. கிராமங்களில் ஏடிஎம் அமைப்பதற்கு மற்றும் அதன் பாரமரிப்பு செலவுகளுக்கு அரசு மானியம் அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

கிட்டத்தட்ட நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களும் வங்கிக் கணக்குகளைக் கொண்டுள்ளன. மத்திய அரசின் பல்வேறு மானியத் திட்டங்கள் நேரடியாகவே மக்களின் வங்கிக் கணக்குகளுக்கே அனுப்பப்படுகின்றன. அடிப்படை உதவித் திட்டங்கள் பலவும் கிராமப்புற மக்களை நோக்கமாகக் கொண்டே ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் அரசு தரும் மானியத் தொகைகளை எளிதாக பரிவர்த்தனை செய்து கொள்ளும் வகையில் கிராமப்புறங்களில் ஏடிஎம்கள் அமைக்கப்படவில்லை. தற்போது நகரங்களில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பயன்பாடு வளர்ந்து வருகிறது. ஆனால் கிராமங்களில் ஏடிஎம் பயன்பாடு கள் கூட முழுமையாகச் சென்று சேரவில்லை.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி உட்பட பல்வேறு வங்கிகள் மற்றும் சில அமைப்புகளுடன் பேசிவருகி றோம் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x