Published : 11 Aug 2019 09:02 AM
Last Updated : 11 Aug 2019 09:02 AM

தொழில் துறைகளின் வளர்ச்சி சரிவு

புதுடெல்லி

இந்தியா, பொருளாதார மந்த நிலையை சந்தித்து வருகின்ற தற்போதைய நிலையில், தொழில் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி ஜூன் மாதத்தில் கணிசமான அளவில் குறைந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவில் ஜூன் மாதத்தில் உற்பத்தி வளர்ச்சி 2 சதவீதமாக உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தது. இறுதியாக பிப்ரவரி மாதத்தில் உற்பத்தி வளர்ச்சி 0.2 சதவீதமாக இருந்தது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் தொழில் உற்பத்தி குறியீடு (ஐஐபி) 3.6 சதவீதமாக உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் உற்பத்தி வளர்ச்சி 5.1 சதவீதமாக இருந்தது. சுரங்கத் துறையில் வளர்ச்சி 1.6 சதவீதமாக உள்ளது. சென்ற ஆண்டில் அது 6.5 சதவீதமாக இருந்தது. உற்பத்தி துறையில் வளர்ச்சி ஜூன் மாதத்தில் 1.2 சதவீதமாக உள்ளது. சென்ற ஆண்டில் அது 6.9 சதவீதமாக இருந்தது.

முதலீடுகள் மற்றும் நுகர்வுகள் குறைந்திருப்பதால், அவை தொழில் துறை உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.35 சதவீதம் குறைத்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டுக்கான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வரும் ஆகஸ்ட் 30 அன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த ஆண் டில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதால் நாட்டின் வளர்ச்சி வீதத்தில் அவை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x