

புதுடெல்லி
பயன்படுத்தப்பட்ட சமையல் எண் ணெயில் இருந்து பயோடீசல் தயா ரிப்பதற்கான திட்டத்தை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தொடங்கி வைத்துள்ளார்.
அரசு எண்ணெய் நிறுவனங் களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங் களின்கீழ் இந்தப் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய திட்டத்தின்படி, ஹோட்டல்கள், பெரிய உணவகங் கள் என பல்வேறு இடங்களில் இருந்து பயன்படுத்தப்பட்ட சமை யல் எண்ணெய் பெறப்பட்டு அவற்றின் மூலம் பயோடீசல் தயாரிக்கப்படும். நாடு முழுவது முள்ள 100 நகரங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள் ளது. இதற்கான ஆலைகளை உரு வாக்க தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அரசு எதிர் நோக்கி உள்ளது. ஆரம்ப கட்டமாக அரசின் மூன்று எண்ணெய் நிறுவனங்கள் பயோடீசல் தயாரிப்பை மேற் கொள்ள இருக்கின்றன. பயன்படுத் தப்பட்ட எண்ணெய்களை மொத்த மாக சேகரிப்பதற்காக புதிய செயலி யும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் தர்மேந் திர பிரதான் கூறியபோது, ‘அமுல் பால் நிறுவனம், மாடு வளர்க்கும் வீடுகளிலிருந்து பாலினைப் பெற்று அதை வெவ்வேறு பால் தயாரிப் பாக மாற்றி விற்பனை செய்கிறது.
அதைபோலவே இந்த திட்டமும். சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்களை, அவை பயன் படுத்தப்பட்ட பிறகு மொத்தமாக வாங்கப்படும். அவற்றை கொண்டு பயோ டீசல் உருவாக்கப்படும்’ என்று தெரிவித்தார்.
இந்தியாவின் டீசல் மற்றும் பெட்ரோல் நுகர்வு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் ஒவ் வொரு மாதமும் 850 கோடி லிட்டர் அளவில் டீசல் நுகரப்படுகிறது.
இந்த டீசல் அளவில் 2030-ம் ஆண்டுக்குள் 5 சதவீதம் பயோ டீசலை சேர்ப்பதற்கு அரசு முயற்சி களை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாகவே பயன்படுத்தப் பட்ட சமையல் எண்ணெய் மூலம் பயோடீசல் தயாரிபதற்கான நடவ டிக்கையில் இறங்கியுள்ளது. தற் போது பெட்ரோலில் 7 சதவீதம் அள வில் எத்தனால் கலக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுக்கு 2,700 கோடி லிட்டர் சமையல் எண்ணெய் இந்திய மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இதில் பயோடீசல் தயாரிப்புக்கு என 140 கோடி லிட்டர் பயன்படுத்தப் பட்ட சமையல் எண்ணெய்களை சேகரிக்க முடியும். அவற்றின் மூலம் 110 கோடி லிட்டர் பயோடீசல் உரு வாக்க முடியும் என்று கூறப்படு கிறது. ஆனால் தற்போதைய நிலை யில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்களை முறைப்படுத்தி சேகரிப்பதற்காக கட்டமைப்பு உருவாக்கப்படவில்லை.