Published : 11 Aug 2019 07:10 AM
Last Updated : 11 Aug 2019 07:10 AM

தங்கம் விலை பவுனுக்கு 104 ரூபாய் அதிகரிப்பு 

சென்னை

சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.28 ஆயிரத்து 656-க்கு விற்கப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்வு, அமெரிக்காவில் பொருளாதார பின்னடைவு, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.28,656க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 582-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3 ஆயிரத்து 569-க்கு விற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x