இவரைத் தெரியுமா?- ராஜேஷ் அகர்வால்

இவரைத் தெரியுமா?- ராஜேஷ் அகர்வால்
Updated on
1 min read

செல்போன் தயாரிப்பு நிறுவ னமான மைக்ரோமேக்ஸ் இன்பர்மேட்டிக்ஸ் நிறுவனத் தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர்.

சேனல் மேனேஜ்மென்ட், மறுசீரமைப்பு மற்றும் தகவல் தொடர்புத் துறையில் 22 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர்.

பெர்டெக் கம்ப்யூட்டர்ஸ் மற்றும் யுனிவெர்சல் கம்ப் யூட்டர்ஸ் நிறுவனங்களில் வாடிக்கையாளர் சேவை அதிகாரியாக பணி யாற்றியுள்ளார்.

மைக்ரோமேக்ஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் இயக்குநராக 24 ஆண்டுகளாக பொறுப்பு வகிப்பவர். ஷாகுன் பில்டுவெல் நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றியவர்.

கொல்கத்தாவில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினீயரிங் கல்வி நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் பட்டம் பெற்றவர்.

தனது பிசினஸ் குரு வாரன் பஃபெட் என்பார். வாலிபால், கிரிக்கெட், டேபிள் டென்னிஸ் விளையாட்டில் நேரம் செலவிடுவார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in