Published : 10 Aug 2019 09:12 AM
Last Updated : 10 Aug 2019 09:12 AM

மத்திய அரசின் விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம் ஆரம்பம்

புதுடெல்லி

சிறு விவசாயிகளுக்கான ஓய்வூதி யத் திட்டம் நடப்பு நிதி ஆண்டுக் கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான பதிவு செயல்பாடுகள் நேற்று முதல் தொடங்கியுள்ளன.

பிரதம மந்திரி கிஸான் மன் தன் யோஜனா (பிஎம் கேஎம்ஒய்) என்ற திட்டம் இந்த நிதி ஆண்டின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந் தது. இந்த ஓய்வுதியத் திட்டத்தில் பதிவு செய்யும் விவசாயிகள், 60 வயதை அடையும் போது அவர் களுக்கான ஓய்வு ஊதியமாக ஒவ் வொரு மாதமும் ரூ.3,000 வழங்கப் படும்.

5 ஏக்கர் வரையில் விவசாய நிலம் கொண்டிருக்கும் விவசாயி களுக்கு இந்த திட்டம் பொருந்தும். அவர்களில் 18 முதல் 40 வயது வரையிலான விவசாயிகள் இந்த திட்டத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளலாம். அவர்களுடைய வய துக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் ரூ.55 முதல் ரூ.200 வரை செலுத்த வேண்டும். அவர்கள் ஓய்வு பெறும் (60) வயதை அடையும் வரை இந்த நிதியை செலுத்த வேண்டும். அதற்கு நிகரான தொகையை அரசும் அவர்கள் கணக்கில் செலுத் தும். ஓய்வு பெற்ற பிறகு, இந்தக் கணக்கில் இருந்து ஓய்வு ஊதியம் மாதாமாதம் அவர்களுக்கு வழங் கப்படும்.

இதுகுறித்து வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியபோது, ‘விவசாயிகள் கடுமை யாக உழைகின்ற போதும் அவர் களுக்கு போதிய வருமானம் கிடைப் பதில்லை. எனவே அவர்களுடைய ஓய்வுகாலத்துக்கு பிறகான வரு மானத்தை உறுதி செய்யவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள் ளது. ஜம்மு, காஷ்மீர், லடாக்கில் உள்ள விவசாயிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். கூடிய விரைவில் விவசாயிகளின் வரு மானத்தை இரட்டிப்பாக்குவதற் கான நடவடிக்கைகள் எடுக் கப்படும்’ என்று தெரிவித்தார்.

மேலும் அவர், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்கான பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டத்தில் இந்த ஆண்டுக்குள் 10 கோடி விவசாயிகள் இணைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

பிஎம் கிஸான் திட்டத்தின்கீழ் உள்ள விவசாயிகளுக்கு வருடம் ரூ.6,000 உதவித் தொகையாக வழங்கப்படும். வருடம் மூன்று தவணையில் இந்த உதவித் தொகை வழங்கப்படும்.

மொத்தமாக இந்த திட்டத்தில் 14.5 கோடி விவசாயிகள் இணைக் கப்பட உள்ளனர். இதற்கென 2019-2020 நிதி ஆண்டில் ரூ.87 ஆயிரம் கோடி அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தில் உள்ள கண வன் மனைவி என இருவரும் விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தின்கீழ் தனித்தனியாக இணைந்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x