Published : 10 Aug 2019 08:48 AM
Last Updated : 10 Aug 2019 08:48 AM

வரித் துறையினரின் நெருக்கடிகளுக்கு தீர்வு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

புதுடெல்லி

வரி ஆய்வு தொடர்பாக தொழில் துறையினர் எதிர்கொள்ளும் நெருக் கடிகளுக்கு விரைவில் தீர்வு காணப் படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா உறுதி அளித்துள்ளார்.

வரித் துறை அதிகாரிகள், முறை கேடாக தொழில் துறையினருக்கு தரும் நெருக்கடிகளை தீர்ப்பதற் காக புதிய தொழில்நுட்ப கட்ட மைப்பு உருவாக்கப்படும். வரித் துறையினரால் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்ட நபர்கள் தங்கள் புகார்களை அதில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அவர் கூறி உள்ளார்.

கடந்த மாதம் கஃபே காபி டே நிறுவனர் சித்தார்த்தா தற் கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன் கடிதம் ஒன்றை விட்டுச் சென்றார். அதில், வரித் துறை அதிகாரிகள் தனக்கு கடுமையான தொந்தரவு அளித்ததாக குறிப்பிட்டு இருந்தார். அனைத்து வரிகளும் முறையாக செலுத்தப்பட்ட நிலையிலும், வரித் துறை அதிகாரிகள் தொடர்ந்து தன்னை துன்புறுத்தியதாக அவர் குறிப்பிட்டு இருந்தார். சித்தார்த்தா கூறிய தகவல்கள் தொழில் துறை யினரிடையே சர்ச்சையை ஏற்படுத் தியது.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக, சிஐஐ கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்மலா சீதாராமன் தனது கருத்துகளை தெரிவித்தார். வரித் துறை அதிகாரிகள் முறைகேடாக ஏதேனும் தொந்தரவு அளித்தால், அது தொடர்பான புகார்களை நேரடியாக எனக்கு அனுப்புங்கள். இவ்வகையான தொந்தரவுகளை தீர்ப்பதற்காக விரைவில் புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய தீர்வு மையம் அமைக்கப்படும் என்று கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக, அடுத்த வாரம் முதல் நாடுமுழு வதுமுள்ள தொழில் துறையினரை சந்திக்க இருப்பதாக தெரிவித் துள்ளார்.

தற்போது, வாகனத் தயா ரிப்பு நிறுவனங்கள் கடும் சரிவை சந் தித்து வருகின்றன. என்பிஎஃப்சி கடும் பணத் தட்டுப்பாட்டில் உள் ளது. நாடும் பொருளாதார மந்த நிலையில் உள்ளது. தொழில் நிறுவனங்களுக்கு அரசு செலுத்த வேண்டிய கடன் தொகைகள் இன் னும் செலுத்தப்படாமல் இருக்கின் றன. சிறு, குறு, நடுத்தர நிறுவனங் களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையில் ரூ.48,000 கோடி அளவில் இன்னும் வழங்கப்படா மல் உள்ளன.

இதுகுறித்து பேசியபோது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சீர்படுத்துவதற்காக அரசும் ரிசர்வ் வங்கியும் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. நிதி நிறுவ னங்கள், தொழில் துறைகள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் விரை வில் சரி செய்யப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x