

மும்பை
ஆட்டோமொபைல் துறையில் தற் போது ஏற்பட்டுள்ள தேக்க நிலை யால் மிகப் பெரிய அளவில் வேலை இழப்பு அபாயம் உருவாகியுள்ளது என்று மஹிந்திரா நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கா விடில் 3.5 கோடி பேர் வேலையிழக் கும் அபாயம் ஏற்படும் என்றும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது.
ஆட்டோமொபைல் துறைக்கு வங்கிகள் 55 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை கடன் வழங்கி உள்ளன. இதில் கார்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கான கடன் அளவு 30 சதவீத அளவுக்கு உள் ளது. தற்போது ஏற்பட்டுள்ள தேக்க நிலையை சமாளிக்க பெரும் பாலான ஆட்டோமொபைல் நிறு வனங்கள் உற்பத்தியைக் குறைத்து வருகின்றன. இதனால் ஊழியர்களுக்கு ‘லே - ஆஃப்’ அளிக்கப்படுகின்றது.
சில நிறு வனங்கள் ஒரு வாரம் முதல் அதிகபட்சம் 15 நாட்கள் வரை ஆலைகளை மூடி உற்பத்தி குறைப்பு நடவடிக்கையில் இறங்கி யுள்ளன. இதே நிலை நீடித்தால் அது ஆட்டோமொபைல் துறைக்கு மட்டுமல்ல இத்துறையை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெற்றுள்ள 3.5 கோடி பேரின் வேலை கேள்விக்குறியாகிவிடும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள சரிவை ஈடுகட்ட அரசு ஜிஎஸ்டி-யை குறைக்கலாம் என்றும் வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்தே உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் 3.5 லட்சம் பணி யாளர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஏற்பட்டுள்ள மிகவும் மோசமான தேக்க நிலையை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து விற்பனையை ஊக்கப் படுத்த வேண்டும் என்றும் மஹிந் திரா அண்ட் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லாபம் 52% சரிவு மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் 52.6 சதவீதம் சரிந்துள்ளது. நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் ரூ. 894.11 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 1,884.66 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் முதல் காலாண்டு வருமானம் ரூ. 26,289.48 கோடி ஆகும்.