Published : 07 Aug 2019 10:20 AM
Last Updated : 07 Aug 2019 10:20 AM

நிர்மலா சீதாராமன் மற்றும் நிதின் கட்கரியுடன் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பிரதிநிதிகள் சந்திப்பு

புதுடெல்லி

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறு வனங்களுக்கான அமைச்சர் நிதின் கட்கரியை சிறு, குறு, நடுத்தர நிறு வனங்களின் பிரதிநிதிகளை சந்தித் தனர். அப்போது, வங்கிகள் கடன் அளிப்பதற்கு கடும் கட்டுப் பாடுகளை விதிப்பதாகவும், கடன் கிடைக்காமல் எஸ்எம்இ துறை கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாகக் கூறினர். எளிதில் கடன் கிடைப்பதற்கான நிலையை உருவாக்க வேண்டும் என்று சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டனர்.

வங்கிகள் தொடர்ந்து நிதி மோசடிகளை சந்தித்து வருவதால், அவை கடன் வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களைச் சார்ந்த வணிகர்கள் தங்கள் வியாபார முன் னேற்றத்துக்கான கடன்களை பெறு வதில் சிக்கலை சந்தித்து வருகின் றனர். அவர்கள் வங்கிகளில் கடன் பெறுவதற்கு அதிக உத்திரவாத பத்திரங்களை சமர்ப்பிக்க வேண் டியதாக உள்ளது. இந்நிலையில் வங்கிகளிலிருந்து தாங்கள் எளிதாக கடன்பெறுவதற்கான வழிகளை உருவாக்கித் தருமாறு கேட்டுக் கொண்டனர்.

ஜிஎஸ்டி ரீஃபண்ட் தொடர்பாக பல்வேறு பிர்ச்சினைகளை எதிர் கொள்வதாகக் கூறினர். அதைத் தொடர்ந்து, ஜிஎஸ்டி ரீஃபண்ட் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் தனித்துவ தயாரிப்பில் ஈடு படும் நிறுவனங்களுக்கு அரசு ஊக்கத் தொகை வழங்க வேண் டும் என்றும் அந்த சந்திப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் சிறு, குறு, நடுத்தர நிறு வனங்களுக்கான வரையறை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். ஜிஎஸ்டி ரீஃபண்ட் தொடர்பான நடைமுறை கள் மாற்றி அமைக்கப்படும் என்று அரசு உறுதி அளித்துள்ளது. மேலும், அவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலிப்ப தாக அரசு தரப்பில் இருந்து கூறப் பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி யில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங் கள் மிக முக்கிய பங்காற்றுகின் றன. அவை மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. இவ்வகை நிறுவனங்களின் வளர்ச்சியை மேம்படுத்த நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x