Published : 07 Aug 2019 10:12 AM
Last Updated : 07 Aug 2019 10:12 AM

மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும் ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கி

புதுடெல்லி

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப் பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப் பட்டு இருக்கிற நிலையில், அம் மாநிலத்தின் வங்கியான ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கி மத்திய அர சின் கட்டுப்பாட்டின் கீழ் வர உள்ளது.

இதுவரை ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அம்மாநிலத் துக்கென்று தனி அதிகாரம் பெற்ற வங்கி செயல்பட்டு வந்தது. கிட்டத் தட்ட ரிசர்வ் வங்கிக்கு நிகரான அதி காரம் பெற்றதாக ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கி இயங்கி வந்தது. இந்நிலையில் அம்மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து திங்கள் கிழமை அன்று நீக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வங்கி மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரவுள்ளது.

தற்போது அம்மாநில அரசு அவ்வங்கியின் 60 சதவீத பங்கு களைக் கொண்டிருக்கின்றது. இந் நிலையில் ஜம்மு காஷ்மீர் தனித் தனி யூனியன் பிரதேசங்களாக மாற்றப்படும் நிலையில், அவ்வங்கி யின் மீதான மொத்தக்கட்டுப்பாடும் மத்திய அரசின்கீழ் வந்துவிடும். அதன்படி, அவ்வங்கிக்கான தலைமை நிதி அதிகாரி மற்றும் இயக்குநர்கள் நியமனங்களை மத்திய நிதி அமைச்சகமே மேற் கொள்ளும். இந்நிலையில், அவ் வங்கியை ஒருங்கிணைப்பதற்கான வழிகளை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், அரசு உடனடியாக இந்த ஒருங்கிணைப்பை மேற் கொள்ளாது. அதற்கு முன்னால் அந்த வங்கியை பலப்படுத்துவதற் கான பல்வேறு வழிகளை ஆராயும் என்று கூறப்படுகிறது.

சமீப காலங்களில் இவ்வங்கி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. பிரிவினைவாதிகளுக்கு இவ்வங்கியிலிருந்து நிதி அளிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டும் அவற்றில் ஒன்று. அதைத் தொடர்ந்து அவ்வங்கியின் தலைவர் பர்வீஸ் அகமது நிக்ரோ பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கியை பொதுத் துறை வங்கியாக மாற்று வதற்கான திட்டத்துக்கு கடந்த நவம்பர் மாதம் ஒப்புதல் அளிக்கப் பட்டது. அதைத் தொடந்து இவ் வங்கி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x