பி.ஜி.ஸ்ரீனிவாஸ் - இவரைத் தெரியுமா?

பி.ஜி.ஸ்ரீனிவாஸ் - இவரைத் தெரியுமா?
Updated on
1 min read

$ இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் குழு உறுப்பினர்.

$ நிதிச்சேவைகள், உற்பத்தி, தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல முக்கிய பிரிவுகளைக் கையாளுகிறார்.

$ இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் அதிக சம்பளம் வாங்கும் நிர்வாகிகளில் இவரும் ஒருவர்.

$ 1999-ம் ஆண்டு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். அதற்கு முன்பு ஏ.பி.பி. நிறுவனத்தில் 14 ஆண்டுகள் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

$ பெங்களூரு பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்தவர். வார்டன் நிர்வாகக் கல்லூரி, ஐ.ஐ.எம்..ஆமதாபாத் உள்ளிட்ட நிர்வாகக் கல்லூரிகளில் பல சிறப்பு நிர்வாக பயிற்சி பெற்றவர்.

$ இன்ஃபோசிஸின் தற்போதைய சி.இ.ஓ. சிபுலால் அடுத்த வருடம் ஜனவரியில் ஓய்வு பெறுகிறார். அவருக்குப் பிறகு சி.இ.ஒ. ஆகும் வாய்ப்பு இவருக்குப் பிரகாசமாக இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in