

மும்பை
உடனடி பணப்பரிவர்த்தனை சேவை என்று அழைக்கப்படும் ஐஎம் பிஎஸ் மூலமாக ஜூலை மாதத்தில் மட்டும் ரூ.1.82 லட்சம் கோடி அள வில் பணப் பரிவர்த்தனை மேற் கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை இதன் வழியாக மேற்கொள்ளப் பட்ட பரிவர்த்தனை மதிப்பில் இதுவே அதிகபட்ச அளவாகும்.
ஐஎம்பிஎஸ் என்பது வங்கிகள் வழங்கும் இணையவழி பணப்பரி வர்த்தனை சேவை முறையாகும். ஆர்டிஜிஎஸ் மற்றும் நெஃப்ட் சேவைகள் போல் அல்லாமல் ஐஎம்பிஎஸ் மூலமாக 24 மணி நேர மும் பணப்பரிவர்த்தனை மேற் கொள்ள முடியும்.
ஐஎம்பிஎஸ் மூலமாக ஜூலை மாதத்தில் மட்டும் 18.92 கோடி பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அதன் மூலம் ரூ.1.82 லட்சம் கோடி அளவில் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. ஜூன் மாதத்தில் 17.13 கோடி பரிவர்த் தனை மேற்கொள்ளப்பட்ட நிலை யில் ரூ.1.73 லட்சம் கோடி அள வில் பணப் பரிவர்த்தனை நடந் துள்ளது. இந்திய தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் (என்பிசிஐ) இது குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
யுபிஐ, பிஹெச்ஐஎம் போன்ற பணப்பட்டுவாடா செயலிகள் மூலம் தற்போது அதிக எண்ணிக்கையில் பணப் பரிவர்த்தனை செய்யப்படு கிறது. இருந்தபோதிலும் பரிவர்த் தனை செய்யப்பட்ட பண மதிப்பு அளவில் ஐஎம்பிஎஸ் வழி பரிவர்த்தனையே முன்னிலையில் உள்ளது.
ஜூலை மாதத்தில் 82.2 கோடி அளவில் யுபிஐ மூலம் பரிவர்த் தனை மேற்கொள்ளப்பட்டு உள் ளது. ஆனால் அதன் பரிவர்த் தனை மதிப்பு ரூ.1.46 லட்சம் கோடி யாகவே உள்ளது. அதேபோல் ஜூலை மாதத்தில் 1.60 கோடி பரிவர்த்தனை பிஹெச்ஐஎம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற் றின் மொத்த மதிப்பு ரூ.6,121.67 கோடி ஆகும்.
எஸ்பிஐ, ஆகஸ்ட் 1 முதல் அதன் குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் பிரிவு மற்றும் குறிப்பிட்ட அளவி லான பரிவர்த்தனைக்கு சேவை கட் டனத்தை ரத்து செய்துள்ளது. இந் நிலையில் இந்த நடைமுறையை மற்ற வங்கிகளும் கடைபிடிக்கும் பட்சத்தில் ஐஎம்பிஎஸ் வழியிலான பரிவர்த்தனை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.
டிஜிட்டல் பணப் பரிவத்தனை அதிக அளவில் மேற்கொள்ளப் படுவதாகக் கூறப்படும் இந்த வேளையிலும் ரூபாய் நோட்டு களின் புழக்கம் அதிக அளவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.