

புதுடெல்லி
திவால் சட்ட திருத்த மசோதா கடந்த திங்கள் கிழமை அன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப் பட்டது. இந்நிலையில் நேற்று மக்களவையின் ஒப்புதலுக்கு திருத்த மசோதா அனுப்பப்பட்டது. இந்த திருத்த மசோதா, திவால் வழக்கின் ஒட்டுமொத்த செயல்பாடு களும் 330 நாட்களுக்குள் முடிக்கப் பட வேண்டும் என்று வலி யுறுத்துகிறது. தற்போதைய சட்டம் திவால் நடைமுறைகளுக்கான அதிகபட்ச அவகாசமாக 270 நாட்கள் நிர்ணயித்துள்ளது.
இந்த திருத்த மசோதா குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ‘திவால் சட்டத்தில் கொண்டுவரப்பட உள்ள திருத்தங்கள் திவால் நடவடிக்கை களை குறிப்பிட்ட கால அள வுக்குள் நடத்தி முடிப்பதற்கான வரையறைகளை அளிக்கிறது. அதன்படி இனி திவால் வழக் கின் மொத்த நடைமுறை செயல்பாடுகளும் 330 நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்தார்.
திவால் சட்டத்தில் ஏழு பிரிவுகளில் திருத்தங்கள் மேற் கொள்ளப்பட உள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘இந்த திருத்த மசோதா, திவால் வழக்குகள் தொடர்பான பல்வேறு நடைமுறை செயல்பாடுகளுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை அளிக்கிறது. தீர்வு நடைமுறைக்கான கால அள வுகள் குறித்தும் தெளிவான வரை யறைகளை இந்த மசோதா கொண்டிருக்கிறது.
நிறுவனங்கள் மீதான திவால் நடைமுறைகள், அதாவது அதன் வழக்கு நிலுவைக் காலங்கள், சட்ட நடைமுறைகள் என திவால் தீர்வு நடைமுறைக்கு உட்பட்ட அனைத்து செயல்பாடுகளும் 330 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். இனி திவால் நடைமுறைகளில் காலம் தாழ்த்த முடியாது’ என்று கூறினார்.
அவகாசம் நீட்டிப்பு
தற்போது திவால் சட்டம் 270 நாட்களுக்குள் திவால் தீர்வு நடை முறைகள் முடிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறது. ஆனால், இந்தக் கால அவகாசம் போதாது என பல தரப்பினர் கூறிவந்தனர். இதை யடுத்து இந்த கால அவகாசத்தை நீட்டிக்க திருத்த மசோதாவில் வழிசெய்யப்பட்டுள்ளது.