நுகர்வோர் பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

நுகர்வோர் பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
Updated on
1 min read

புதுடெல்லி

நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யும் மசோதா நேற்று மக்கள வையில் நிறைவேறியது. நுகர் வோர் உரிமை மற்றும் குறை களுக்கு தீர்வு அளிக்கும் வகை யில் புதிய மசோதா இயற்றப் பட்டுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு மசோதா 2018, நுகர்வோரின் நலனையும், நுகர்வோர் குறைகளை உடனடி யாக தீர்ப்பதற்கு சிறப்பான நிர்வாக நடைமுறையையும் இந்த மசோதா கொண்டுள்ளது.

நுகர்வோரின் ஒட்டுமொத்த குறைகளையும் கேட்டு தீர்க்கும் வகையில் இந்த மசோதா உரு வாக்கப்பட்டுள்ளதாக இதை தாக் கல் செய்து பேசிய மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறினார்.

1986-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்துக்கு மாற்றாக இது அமையும். அடுத்தகட்டமாக இது மாநிலங்களவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணை யம் அமைப்பது, மாவட்டங்கள் மற்றும் மாநில அளவில் நுகர் வோர் புகார்களை விசாரிக்க தேவையான அமைப்புகளை உருவாக்க இந்த மசோதா வகை செய்துள்ளது.

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) அமைத்து நுகர்வோர் உரிமைகளை பாது காத்து மேம்படுத்தலாம் என்றும் மசோதா குறிப்பிட்டுள்ளது.

தவறான பொருள்களால் நுகர் வோருக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் வகை செய்யப் பட்டுள்ளது.

செல்போன் பேச்சுகள் தொடர்பு அறுபடுதல் (கால் டிராப்) சேவை குறித்தும் நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவில் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கலாம் என்று மசோதா குறித்து பேசிய பாஜக உறுப்பினர் ராஜீவ் பிரதாப் ரூடி ஆலோசனை கூறினார். திமுக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த மசோதா வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in