10 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: சிஸ்கோ நிறுவனம் திட்டம்

10 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: சிஸ்கோ நிறுவனம் திட்டம்
Updated on
1 min read

கொச்சி

2025 ஆண்டுக்குள் 10 லட்சம் இந்திய மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க திட்டமிட்டிருப்பதாக சிஸ்கோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

சிஸ்கோ அமெரிக்காவைச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தொழில் நுட்பத் துறையில் இந்திய மாண வர்களின் திறனை வளர்ப்பதற்கான பயிற்சியை அளித்துவருகிறது. இதுவரை 3.5 லட்சம் இந்திய மாணவர்களுக்கு இந்நிறுவனம் பயிற்சியளித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைமை தகவல் அதிகாரி வி சி கோபல்ரத்னம் கூறியபோது, 2020 க்குள் 2.5 லட்சம் இந்திய மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க வேண்டும் என்று 2016 ஆண்டு முடிவெடுத்து இருந் தோம். ஆனால், தற்போது நிர் ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். எங்கள் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த உள்ளோம். 2025-க்குள் 10 லட் சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதை தற்போதைய நோக்க மாக கொண்டுள்ளோம்’ என்று தெரிவித்தார்.

மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் தொழில் பயிற்சி இயக்குனரகம், நாடு முழுவதுமுள்ள தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் (ஐடிஐ) உள்ள 15 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப் பதற்காக சிஸ்கோ, அசெஞ்சர், குவெஸ்ட் அலையன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in