Published : 30 Jul 2019 11:49 AM
Last Updated : 30 Jul 2019 11:49 AM

வோடபோன் ஐடியா பங்குகள் 27% சரிவு: சந்தை மதிப்பு ஒரே நாளில் ரூ.7,126 கோடி குறைந்தது

புதுடெல்லி

வோடபோன் ஐடியா நிறுவனப் பங்குகள் வாரத்தின் முதல் நாளான நேற்று 27 சதவீத அளவுக்கு சரிந்தன. இதனால் இந் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் ரூ.7,126 கோடி சரிந்தது.

நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவுகள் நஷ்டத்தைச் சந்தித்திருப்பதும் மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைந் ததுமே சந்தையில் இந்நிறுவன பங்குகளின் சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.

மும்பை பங்குச் சந்தையில் 26.81 சதவீத அளவுக்கு சரிந்து ரூ.6.77 என்ற விலையில் இவை வர்த்தகமாயின. தேசிய பங்குச் சந்தையில் 29 சதவீதம் சரிந்து ரூ.6.56 என்ற விலையில் இந்நிறுவன பங்குகள் வர்த்தகமாயின. இது கடந்த 52 வாரங்களில் இல்லாத கடுமையான சரிவாகும்.

இந்நிறுவனப் பங்குகள் அதிக அளவில் விற்பனையானதால் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.7,126.14 கோடி சரிந்து ரூ.19,453.86 கோடி என்ற அளவுக்கு வந்துள்ளது. மொத்தம் 484.86 லட்சம் பங்குகள் மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையில் 66 கோடி பங்குகளும் வர்த்தகமாயின.

பிர்லா குழுமத்தின் மற்றொரு நிறுவனமான கிராஸிம் இண்டஸ்ட் ரீஸ் பங்குகள் 9.08 சதவீதமும், ஆதித்யா பிர்லா கேபிடல் பங்குகள் 4.37 சதவீதமும், ஆதித்யா பிர்லா மணி 1.65 சதவீதமும், அல்ட்ரா டெக் 2.94 சதவீதமும், ஹிண்டால்கோ பங்குகள் 2.52 சதவீதமும் சரிவை சந்தித்தன.

ஒட்டுமொத்தமாக இக்குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பில் ரூ.17,500 கோடி சரிவு ஒரே நாளில் ஏற்பட்டுள்ளது.

வோடபோன் ஐடியா முதல் காலாண்டு வருமானம் 4.3 சதவீதம் சரிந்தது. ஜூன் மாதம் முடிவடைந்த முதல் காலாண்டில் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த நஷ்டம் ரூ.4,873.90 கோடியாகும். இந்நிறுவனத்தின் வருமானம் ரூ.11,269.90 கோடியாகும்.

ஜனவரி முதல் மார்ச் வரையான காலத்தில் இது ரூ.11,775 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் நஷ்டம் ரூ.4,881.90 கோடி என பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் நிறுவனம் தெரி வித்துள்ளது. நிறுவனத்தின் காலாண்டு வாடிக்கையாளர் எண் ணிக்கை 32 கோடியாக உள்ளது. முன்பு இது 33.41 கோடியாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x