

மும்பை
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கு மந்தமான நிலையிலேயே இருக்கும் என சர்வதேச தரச் சான்று நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது. இதனால் வங்கிகளின் வாராக்கடன் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.
சர்வதேச அளவில் பிரபலமான முதலீட்டு சேவைகள் மற்றும் தரச்சான்று நிறுவனமான மூடிஸ் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் அடுத்த 12 முதல் 18 மாதங்களில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முந்தைய ஆண்டுகளில் இருந்ததைவிடவும் குறைவாகவே இருக்கும் எனக் கூறியுள்ளது.
பொருளாதார வளர்ச்சி குறை வதால் தொழில்துறை பாதிக்கப் படும் அபாயம் உள்ளது. மேலும் குறிப்பாக வங்கிகளின் வாராக்கடன் அளவு அதிகரிக்கும். இந்தமுறை சிறுதொழில்கள், சில்லறை வணி கங்கள் ஆகியவற்றின் கடன்கள் பெருமளவில் வாராக்கடன்களாக மாறும் நிலை உண்டாகலாம் எனவும் எச்சரித்துள்ளது. ஆனாலும், வங்கி களின் செயல்பாடுகளில் பெரிய அளவில் பிரச்சினைகள் இருக்காது என்றும் கூறியுள்ளது.
மூடிஸ் நிறுவனத்தின் துணை தலைவர் அல்கா அன்பரசு கூறும் போது, “பொருளாதார வளர்ச்சி குறைவால் வங்கிகளின் கடன் தரம் பாதிக்கப்படும். காரணம் தொழில் துறை பாதிக்கப்படும் என்பதால் கடனைத் திரும்பச் செலுத்துவதில் சிக்கல்கள் ஏற்படும். அதேசமயம் வங்கிகளின் செயல்பாடு குழப் பங்கள் இல்லாமல் நிலையாக இருக்கும்” என்றார்.
சிறு தொழில்கள், சில்லறை வணிகங்கள் ஆகியவற்றுக்குக் கடன் அளித்திருப்பதில் பெரும்பான்மை பங்கு வகிப்பவை வங்கியல்லாத நிதி நிறுவனங்களாக இருப்பதால் வங்கிகளின் செயல்பாடுகளில் பெரிய அளவில் பிரச்சினை வர வாய்ப்பில்லை. மேலும் பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு மூல தனம் வழங்குவதும் வங்கித் துறையை நிலையாக வைத்திருக்க உதவும் என மூடிஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக் கும் முயற்சியில் அரசு தீவிரமாக உள்ளது. ஏனெனில் கடந்த சில ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி குறைவான வேகத் திலேயே இருந்துவந்தது. ஜிஎஸ்டி, திவால் சட்டம் போன்ற சீர்திருத் தங்கள் வரும் காலங்களில் பொரு ளாதாரத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும், வளர்ச்சி அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மூடிஸ் அறிக்கை அரசின் முயற்சிகளுக்கு எதிர் மாறாக உள்ளது குறிப்பிடத் தக்கது.