

புதுடெல்லி
தனது நிறுவனம் மற்றும் குடும்பத்தி னரின் சொத்துகளை பறிமுதல் செய்வதை எதிர்த்து விஜய் மல்லையா தாக்கல் செய்த மனுவை ஆகஸ்ட் 2-ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தொழிலதிபர் விஜய் மல்லையா, வங்கிகளில் கடன் பெற்று அதை திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றார். தற்போது அவர் மீது லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதனிடையே அவரது நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துகள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துகளை அம லாக்கத்துறை பறிமுதல் செய்துள் ளது.
இதை எதிர்த்து விஜய் மல்லையா சார்பில் அவரது வழக்கறிஞர் பாலி எஸ் நாரிமன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விஜய் மல்லையா செலுத்த வேண்டிய கடன் பாக்கிக்காக அவரது நிறுவனங்கள் மற்றும் உறவினர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கு சட்ட ரீதியில் இடமுள்ளதா என மனுதாரர் சார்பில் கோரப்பட்டது. பறிமுதல் நடவடிக்கை செல்லாது என அறிவிக்குமாறு மனுதாரர் கோரியிருந்தார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இது குறித்த விசாரணையை ஆகஸ்ட் 2-ம் தேதி தள்ளி வைப்பதாகக் கூறினர்.
இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி திரும்பச் செலுத்தாமல் நிலுவை வைத்ததோடு சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக் காமல் இந்தியாவை விட்டு இங்கிலாந்து தப்பிச் சென்றார். தற்போது விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை களை லண்டன் நீதிமன்றம் மூல மாக அமலாக்கத்துறை மேற்கொண்டுள் ளது.