

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் வங்கி வாடிக்கையாளர்கள் குறைந்த அளவு இருப்புத் தொகையை பராமரித்திடாத கார ணத்தால், ரூ.10,000 கோடி அளவில் அபராதம் வசூலாகி யுள்ளது.
பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் என 22 வங்கிகளில் இந்த அபராதம் வசூலாகியுள்ளது.
இந்த 22 வங்கிகளில் எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட 18 பொதுத்துறை வங்கிகளும், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி போன்ற நான்கு தனியார் துறை வங்கிகளும் அடங்கும்.
மேற்கூறப்பட்ட வங்கிகள் ஒவ் வொன்றும் வெவ்வேறு அளவில் குறைந்த அளவு வைப்பு நிதிக் கான வரையறையைக் கொண் டிருக்கின்றன. உதாரணமாக மாநக ரங்களில் உள்ள எஸ்பிஐ கணக் காளர்கள் மாதம் ரூ.3,000-த்தை குறைந்த அளவு வைப்பு நிதியாக பராமரிக்க வேண்டும் என்பது விதி. சிறு நகரம், கிராமத்துக்கு என்று தனித்தனி அளவீடுகள் உண்டு. அவை முறையாக பராமரிக்கப் படாதபட்சத்தில் அபராதம் விதிக்கப் படும்.
இவ்விதம் அபராதம் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 22 வங்கிகளில் ரூ.10,000 கோடி அபராதமாக வசூல் ஆகியுள்ளது.