

ஐசிஐசிஐ வங்கி ஜூன் மாதம் முடிந்த காலாண்டில் ரூ.2,513 கோடியை மொத்த லாபமாக ஈட்டியுள்ளது. சென்ற ஆண்டில் இதே காலத்தில் அதன் மொத்த லாபம் ரூ.4.93 கோடியாகவே இருந்தது. வட்டி வருவாய் சென்ற ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட 26.8 சதவீதம் உயர்ந்து ரூ.7,737 கோடியாக உள் ளது. ஜூன் காலாண்டில் அதன் வாரா கடன்களின் அளவு 6.49 சதவீதமாக குறைந்துள்ளது. தற்போது ரூ.2,779 கோடியை வாராக் கடன்களுக்காக ஒதுக் கீடு செய்துள்ளது.